‘மத வெறுப்பரசியல்’ எதிர்ப்புக் கருத்தரங்கம் ஜி.ராமகிருஷ்ணன், பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்பு
31 Jan 2026, 3:56 pm
<p><strong>‘மத வெறுப்பரசியல்’ எதிர்ப்புக் கருத்தரங்கம் ஜி.ராமகிருஷ்ணன், பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்பு</strong></p>
<p>கோயம்புத்தூர், ஜன. 31 - மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, கோவை மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் ‘மத வெறுப்ப ரசியல் எதிர்ப்புக் கருத்தரங்கம் மற்றும் ஓவியக் கண்காட்சி’ கோவையில் நடை பெற்றது. கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள ஜீவஜோதி ஆசிரமத்தில், நடை பெற்ற இந்த கருத்தரங்கில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி. ராம கிருஷ்ணன், காங்கிரஸ் மூத்த தலை வர் பீட்டர் அல்போன்ஸ், தபெதிக பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டி ணன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி சுல்தான் அமீர் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். முன்னதாக, சென்னை அரசு கவின் கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் ஓவியர் சந்துரு தலைமையில் சிறந்த ஓவியர்களின் நேரடி ஓவியப் படைப் பாக்க நிகழ்வு நடைபெற்றது. கோவை மறைமாவட்ட பொருளாளர் ஜெ. செல்வராஜ் இதனைத் தொடங்கி வைக்க, தேஜாவு கார்த்திக் ஓவியக் கண்காட்சியைத் திறந்து வைத்தார். காந்தியடிகளின் படுகொலை, வகுப்புவாத சக்திகளால் நாட்டிற்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் மத நல்லிணக்கத்தின் அவசியம் ஆகிய வற்றை விளக்கும் வகையில் 20-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப் பட்டன. பாஜக அரசுக்கு காந்தி மீது பயம்! நிகழ்வின் போது செய்தியாளர்களி டம் பேசிய ஜி. ராமகிருஷ்ணன், “மதச் சார்பின்மைக்காகப் பாடுபட்ட மகாத்மா காந்தியை மதவெறி சக்தி கள் சுட்டுக்கொன்றன. இன்று அதே சித்தாந்தத்தைக் கொண்ட வாரிசுகள் ஆட்சியில் இருக்கிறார்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் இருந்து காந்தியின் பெயரை நீக்கியதன் மூலம், பாஜக அரசுக்கு இன்னும் காந்தி மீது பயம் இருப்பது வெளிப்படுகிறது” என்றார். வானதி சீனிவாசனுக்கு பீட்டர் அல்போன்ஸ் பதிலடி தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரு வதாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனி வாசன் கூறிய புகாருக்குப் பதில ளித்த பீட்டர் அல்போன்ஸ், “தமிழ கத்தை விமர்சிக்கும் சகோதரி வானதி சீனிவாசன், பாஜக ஆளும் மாநிலங்க ளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடூரமான குற்றங்களை நேரில் சென்று பார்க்க வேண்டும். பெரும் பான்மை ஆதிக்க சமூகம் மட்டுமே வாழ வேண்டும் என்ற சித்தாந்தம் கொண்டவர்களால் காந்தியத்தை ஏற்க முடியாது” என்று சாடினார். மாலையில் நடைபெற்ற கருத்த ரங்கிற்கு இந்திய ஒற்றுமை இயக்க மாநில பொருளாளர் மருத்துவர் டென்னிஸ் கோவில் பிள்ளை தலைமை தாங்கினார். கோவை மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் கே.எஸ். கனகராஜ் வரவேற்புரையாற்றினார்.சிறப்பு அழைப்பாளர்களாக ஜி. ராம கிருஷ்ணன், பீட்டர் அல்போன்ஸ், கு. ராமகிருட்டிணன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சுல்தான் அமீர் ஆகியோர் கலந்துகொண்டு தற்போ தைய அரசியல் சூழலில் மதச்சார் பின்மையின் அவசியம் குறித்து உரை யாற்றினர்.</p>
