தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரயில்வே திட்டங்களுக்கான நிதியை விரைந்து வழங்க வேண்டும்

8 Feb 2026, 3:55 pm
ரயில்வே திட்டங்களுக்கான நிதியை  விரைந்து வழங்க வேண்டும்
<p><strong>ரயில்வே திட்டங்களுக்கான நிதியை &nbsp;விரைந்து வழங்க வேண்டும்</strong></p> <p>பிரதமருக்கு முதல்வர் கடிதம் சென்னை, பிப்.8 - தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களுக்கான நிதியை விரைந்து வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். &nbsp;அதில், முக்கியமான திட்டங்களை மீண்டும் தொடங்கிடவும், கூடுதலாக புதிய ரயில்வே திட்டங்களை அனுமதித்திடவும் ரயில்வே அமைச்சகத்திற்கு உரிய அறி வுரைகளை வழங்கிடுமாறு கோரியுள்ளார். 2500.61.06 ஹெக்டேர் பரப்புள்ள நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் 931.52.96 ஹெக்டேர் பரப்புள்ள நிலங்களுக்கு ரயில்வே துறை நிதியை ஒதுக்கவில்லை என்று முதல்வர் தெரிவித்துள்ளார். 19 முக்கிய ரயில்வே திட்டங்களுக்கு தேவையான 1273.05.15 ஹெக்டேர் நிலங்களில் 94 விழுக்காடு நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டு ரயில்வே துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திண்டிவனம்-நகரி அகல ரயில் பாதை, மதுரை-தூத்துக்குடி அகல ரயில் பாதை, கன்னியாகுமரி-நாகர்கோவில் அகல &nbsp;ரயில் பாதை இரட்டிப்பாக்குதல் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. திருவனந்தபுரம்-கன்னியா குமரி இடையேயான அகல ரயில் பாதை &nbsp;இரட்டிப்பு திட்டத்திற்கான 16.86.51 ஹெக்டேர் நில எடுப்புப் பணி முடிக்கப்படாமல் இருப்பது குறித்து முதல்வர் சுட்டிக் காட்டியுள்ளார். இதற்கு தேவையான 289.78 கோடி ரூபாய் நிதியை ரயில்வே துறை இன்னும் ஒதுக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சகத்தால் நிதியை &nbsp;விடுவிப்பதில் ஏற்படும் தாமதங்களும், பிரித்து வழங்குவதும் திட்டங்களைச் செயல் படுத்துவதில் தடையை ஏற்படுத்தியுள்ள தாக முதல்வர் தெரிவித்துள்ளார். ரயில்வே &nbsp;துறையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி-மதுரை புதிய அகலப்பாதை, திண்டிவனம்-திருவண்ணாமலை அகலப் பாதை திட்டங்களை மீண்டும் தொடங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு இந்திய அளவில் இரண்டா வது பெரிய பொருளாதார மாநிலமாக வும், தொழில்துறை வளர்ச்சிக்கான முக்கிய மையமாகவும் விளங்குவதால், கூடுதலாக புதிய ரயில் திட்டங்களை அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.