தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஸ்கேன் இந்தியா

9 Feb 2026, 3:02 pm
ஸ்கேன் இந்தியா

வேடிக்கை

பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஹஸ்புரா கிராமத்தில் 4 தலித் சிறுமிகள் மரணமடைந்துள்ளது பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. இவர்கள் விஷம் குடித்து விட்டார்கள் என்று முதலில் தகவல் பரவியது. வீட்டில் பெற்றோர்கள் திட்டியதால் கோபப்பட்டு அவ்வாறு செய்து விட்டார்கள் என்றனர். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் வீட்டில் நடக்கவில்லை. அனைத்துக் குழந்தைகளுமே விளையாடத்தான் சென்றனர் என்று பெற்றோர் சொல்கிறார்கள். ஐந்து சிறுமிகளில் ஒருவர் வீடு திரும்பியிருக்கிறார்.  காவல் துறையினரின் விசாரணையோ ஆமையைத் தோற்க டிக்கும் வேகத்தில் நகருகிறது. விசாரித்துக் கொண்டி ருக்கிறோம் என்கிறார்கள். வன்கொடுமைத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரியுங்கள்  என்பது தலித் மக்களின் கோரிக்கை. இதெல்லாம் வாடிக்கைதான் என்பதுபோல ஆளும் கூட்டணி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

உருப்படியில்லை

தில்லியில் பாஜக ஆட்சியமைந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. என்ன செய்தோம் என்று அறிக்கையை ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டுள்ளார்கள். 250 கோடி ரூபாய்க்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, 10,000 கோடி ரூபாய்க்கான திட்டங்கள் நடந்து கொண்டிருப்ப தாகவும் சொல்லியுள்ளனர். இந்தத் திட்டங்கள் பல்லிளித்துக் கிடக்கின்றன என்று மக்கள் குமுறு கிறார்கள். பல பகுதிகளில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. இது பல மாதங்களாகத் தொ டர்கிறது. அதேபோல், பல சாலைகளின் குழிகள் தோண்டப்பட்டு, அது மூடப்படாமல், எந்தவித எச்சரிக்கை அறிவிப்புமின்றி விடப்பட்டிருக்கின் றன. சில நாட்களுக்கு முன்பாக அத்தகைய குழி யொன்றில் ஒரு இளைஞர் விழுந்து இறந்து போனது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி யிருக்கிறது. எந்தத் திட்டமும் உருப்படியாக நிறைவேற வில்லை என்பதுதான் அவர்களின் கருத்தாகும்.

நமாஸ்

மாணவர்கள் அனைவரையும் ‘நமாஸ்’ படிக்கு மாறு சொன்னதாகக் குற்றச்சாட்டு. உத்த ரப்பிரதேசத்தில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜன் முகம்மது மீதுதான் இதைச் சுமத்தினார்கள். அதோடு நிற்கவில்லை. ஜனவரி 31ஆம் தேதியன்று அவரை இடை நீக்கமும் செய்த னர். உள்ளூர் பாஜகவினர்தான் இதைக் கிளப்பிவிட்டனர். மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தும் பாஜகவின் அரசியல் நகர்வு தான் இதற்கும் காரணமாகும். இன்னும் ஓராண்டில் சட்ட மன்றத் தேர்தல் நடக்கப் போகிறது. மக்களவைத் தேர்த லில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து மீள, இஸ்லாமிய வெறுப்புதான் வழி என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விட்டார்கள். ஆனால், தலைமை ஆசிரியரின் மீதான விசாரணையில், இந்தப் பொய்யான குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் தர முடியவில்லை. அவரை மீண்டும் பணியமர்த்தி உள்ளனர். அப்பகுதி மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரும் உண்டு என்பதுதான் பாஜகவி னருக்குக் கோபம்.

“முக்கியமான நபர்”

2022 ஆம் ஆண்டில் அங்கிதா பண்டாரி என்ற பெண் உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய மூன்று பேருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்தி ருக்கிறது. அதில் ஒருவர் பாஜக தலைவரின் மகன். ஆனால், இந்தக் கொலையில் சம் பந்தப்பட்ட “முக்கியமான நபர்” தப்பி விட்டார் என்று அப்பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். தலைநகர் டேராடூ னில் 40 அமைப்புகள் ஏற்பாடு செய்த “மகா பஞ்சாயத்து” ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் நடந்தது. இதில் பெற்றோ ரும் பங்கேற்றனர். ரிஷிகேஷில் நடந்த கொலைக்கு டேராடூனில் முதல் தகவல் அறிக்கை என்று தொடங்கி ஏராளமான குளறுபடிகள் அந்த “முக்கிய மான” நபரைக் காப்பாற்றுவதற்காக நடந்ததாக அதில் பேசியவர்கள் குறிப்பிட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சி கள் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.