வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்திடுக
18 Dec 2025, 5:31 pm
<p><strong>வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்திடுக</strong></p>
<p>கோவை, டிச.18- வன உரிமைச் சட்டத்தை முழுமை யாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் மாநிலம் தழுவிய காத்திருப்புப்போராட் டத்தில் ஈடுபட்டனர். 2006 வன உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். அனைத்து பழங்குடி மக்களுக்கும் வீட்டு மனை வழங்க வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வியாழ னன்று மாநிலம் முழுவதும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட மலைவாழ் மக்கள் சங்கத்தி னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து, மாநில கோரிக்கைகளோடு, உள்ளூர் கோரிக் கைகளையும் முன்வைத்து தொடர் காத் திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மலைவாழ் மக்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசிய வரு வாய் துறை அதிகாரிகள் 10 நாட்க ளுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இந்த காத்திருப்பு போராட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் கருப்பசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் வி.எஸ்.பரமசிவம், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிச் சாமி, மலைவாழ் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் சந்திரன், பத் மினி, மவுளினா, தங்கவேலு, மணி உள் ளிட்டோர் கலந்து கொண்டார். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், கொல்லி மலை வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் பழங்குடி வன திட்ட அலு வலகம் முன்பு நடைபெற்ற தொடர் காத் திருப்புப் போராட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கே.மாணிக் கம் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் கே.சின்னசாமி முன்னிலை வகித் தார். கோரிக்கைகளை விளக்கி தமிழ் நாடு அரசின் பழங்குடியினர் ஆன்றோர் மன்ற உறுப்பினரும், தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாநிலச்செயலா ளருமான இரா. சரவணன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் ஏ. ஆதிநாராயணன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.டி.கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொல்லிமலை தாலுகா செயலாளர் எஸ் தங்கராசு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டத் தலைவர் பூபதி ஆகியோர் பேசினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட சங்கத் தின் தலைவர்களோடு கொல்லிமலை வட்டாட்சியர் த.சந்திரா பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தார். இதனையடுத்து தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக் கப்பட்டது. இந்த காத்திருப்பு போராட் டத்தில் திரளானோர் கலந்து கொண்ட னர். தருமபுரி தருமபுரி மாவட்டம், அரூர் கோட் டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மலைவாழ் மக்கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். அண்ணாமலை தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் பி. பெருமாள், மாவட்டச்செயலாளர் சோ.அருச்சுனன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் என்.மல்லை யன், மாநில துணைத்தலைவர் ஏ. கண் ணகி, மாவட்டப் பொருளாளர் ஏ.சந் தோஷ், மாவட்ட துணைத் தலைவர்கள் சி.சொக்கலிங்கம், ஏ.அன்புரோஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் செல்வி, கே.பழனிச்சாமி, ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன் றியச் செயலாளர்கள் அரூர் பி. குமார், பாப்பிரெட்டிப்பட்டி தி.வ.தனுசன், விவ சாயிகள் சங்க நிர்வாகிகள் சி.வஞ்சி, ஏ. நேரு, எஸ்.கே.கோவிந்தன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஆர்பாப்ட்டதின் முடிவில் கோட்டாட்சியர் அலுவலகத் தில் கோரிக்கை மனுவை சங்க தலை வர்கள் அளித்தனர். ஈரோடு ஈரோடு மாவட்டம், கோபி கோட்டாட் சியர் அலுவலகத்தை மலைவாழ் மக் கள் சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்டத் தலை வர் கே.ஈஸ்வரன், பொருளாளர் டி.கே. வெள்ளையப்பன், முன்னாள் செயலா ளர் சி.துரைசாமி, தமிழ்நாடு விவசாயி கள சங்க தலைவர் எஸ்.வி.மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த னர். இதனையடுத்து தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். தாயாலம்மாள் உள்ளிட்ட பெருந்திரளா னோர் பங்கேற்றனர். சேலம் சேலம் மாவட்டம், ஆத்தூர் கோட் டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற காத்திருப்புப் போராத்திற்கு கல் வராயன் மலைக்கமிட்டி தலைவர் தர் மலிங்கம் தலைமை வகித்தார். தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் துரைராஜ், மாவட்டச் செய லாளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் பி.தங்கவேலு, ஆத்தூர் தாலுகா செயலாளர் வெங்கடாஜலம், தலைவர் விஜயன், வட்டக்குழு உறுப்பி னர் மூத்த தலைவர் இல.கலைமணி, மலைவாழ் மக்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் என்.கிருஷ்ணமூர்த்தி, கல் வராயன்மலை கமிட்டி நிர்வாகிகள் சின்னமணி, தமிழரசன், சிபிஎம் மலைக் கமிட்டி செயலாளர் பாக்கியராஜ் உள் ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதனையடுத்து ஆத்தூர் கோட் டாட்சியர் போராட்டத்தில் ஈடுபட்டவர்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித் தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.</p>
