தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பொதுமக்கள்-அரசியல் கட்சிகளின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றம் ரூ.38 கோடியில் வத்திராயிருப்பு புறவழிச்சாலை அமைக்கும் பணி

27 Feb 2026, 5:32 pm
பொதுமக்கள்-அரசியல் கட்சிகளின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றம் ரூ.38 கோடியில் வத்திராயிருப்பு புறவழிச்சாலை அமைக்கும் பணி
<p><strong>பொதுமக்கள்-அரசியல் கட்சிகளின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றம் ரூ.38 கோடியில் வத்திராயிருப்பு புறவழிச்சாலை அமைக்கும் பணி</strong></p> <p>திருவில்லிபுத்தூர், பிப்.27- &nbsp;விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வத்திரா யிருப்பு பகுதியில் கடந்த காலங்களில் போக்குவரத்து நெருக்கடி கடுமையாக இருந்ததாலும் வாகனங்க ளின் எண்ணிக்கை அதிக ரித்ததாலும் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் அரசி யல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். &nbsp;இந்நிலையில் அரசு நெடுஞ்சாலை துறை திரு நெல்வேலி வட்டம் விருது நகர் கோட்டம் திருவில்லி புத்தூர் உட்கோட்டம் மூல மாகஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு 2026 - 27 நிதியின் கீழ் ரூ.3872. 34 &nbsp;லட்சம் ஒதுக்கியது. சாலை அமைக்கும் பணி இராஜ பாளையத்தைச் சேர்ந்த ஏகேஆர் பைன் மேக் கண் ஸ்ட்ரக்சனுக்கு டெண்டர் மூலம் விடப்பட்டது. இதன் தொடக்க விழா வெள்ளிக் கிழமை அன்று வத்திரா யிருப்பு புதிய பேருந்து நிலை யம் அருகே நடைபெற்றது. தமிழக வருவாய் - பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி &nbsp;சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். அமைச்சர் பேசுகையில் வத்திராயிருப்பு மக்களின் நீண்ட கால கோரிக்கையான புறவழிச்சாலை அமைக்கும் பணியை தற்போது நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டி இந்த அரசு துவக்கி வைத்துள்ளது. இதன் மூலம் கூமாபட்டி, வத்திராயிருப்பு, கான்சாபுரம், புதுப்பட்டி, அர்ச்சனாபுரம், கிழவன் கோவில், பிளவக்கல் உள்ளிட்ட பல கிராமங்கள் பயன்பெறும். நகரின் போக்குவரத்து நெருக்கடி குறையும் என்று கூறினார் . விழாவில் மாவட்ட வரு வாய் அலுவலர் ஆனந்தி, திருவில்லிபுத்தூர் நகர் மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் ,துணைத் தலைவர் செல்வமணி, &lsquo; திரு வில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலை வர் மல்லி ஆறுமுகம், வத்திராயிருப்பு ஒன்றிய முன்னாள் தலைவர் சிந்து முருகன், திமுக மாவட்ட நிர்வாகி ஆர்.வி.கே. துரை, வத்திராயிருப்பு ஒன்றிய திமுக செயலாளர் முனி யாண்டி,பேரூராட்சி தலை வர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ராமசாமி, வட்டாட்சியர் தனம் (பொ றுப்பு) வத்திராயிருப்பு பேரூ ராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், நெடுஞ்சா லைத்துறை விருதுநகர் கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி,திருவில்லிபுத்தூர் உதவி கோட்ட பொறி யாளர் ரவி, உதவி பொறியா ளர் பொன்முரளி சாலை ஆய்வாளர் வனராஜ் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழி யர்கள் &nbsp;கலந்து கொண்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.