தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடுக
29 Dec 2025, 6:22 pm
<p><strong>தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடுக</strong></p>
<p>தருமபுரி, டிச. 29- தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்றிட வலியுறுத்தி, திங்களன்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். அனைத்து அங்கன்வாடி ஊழி யர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அங்கிகரிக்க வேண் டும். மே மாத கோடை விடு முறையை ஒரு மாதமாக வழங்க வேண்டும். குழந்தைகளை பாது காக்கவும் முன் பருவக் கல்வியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 1993- ல் பணியில் சேர்ந்த அங் கன்வாடி ஊழியர்களுக்கு நேரடி நியமனத்தை கைவிட்டு 100 சத வீதம் பதவி உயர்வை அங்கன் வாடி ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். செல்போன் வழங்காத மாவட்டங்களுக்கு உடனடியாக தர மான செல்போன் வழங்கி ஆர். எஸ் முறையை எளிமைபடுத்த வேண் டும். தொகுப்பூதிய முறையை கைவிட வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பையும் முன் பருவக் கல்வியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பி எல் ஒ தேர்தல் பணியில் இருந்து அங்கன் வாடி ஊழியர் உதவியாளர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத் தில் வலியுறுத்தினர். தருமபுரியில் மாவட்டத்தலைவர் பி. சுமதி தலைமை வகித்தார். சிஐ டியு மாவட்ட துணைத்தலைவர் ராஜம்மாள் பேசினார். காரிமங்கலத் தில் ஒன்றியத்தலைவர் கண்மணி தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் சி. கவிதா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச்செயலாளர் ஏ. தெய்வானை ஆகியோர் பேசி னர். பாலக்கோட்டில் மாவட்ட பொருளாளர் என். தெய்வானை தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் பி. ஆறு முகம் பேசினார். நல்லம்பள்ளியில் மாநிலச் செயலாளர் எம். லில்லி புஷ்பம் தலைமை வகித்தார். பென் னாகரத்தில் ஒன்றிய தலைவர் சுமதி தலைமை வகித்தார். சிஐடியு நிர் வாகி முருகேசன் பேசினார். கடத்தூ ரில் மாவட்ட இணைச் செயலாளர் சத்யா, அரூரில் ஒன்றியத் தலைவர் கோமதி, பாப்பிரெட்டிப்பட்டியில் மாவட்ட இணைச் செயலாளர் அல் வியா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.</p>
