தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஓட்டுநர்களின் கோரிக்கையை நிறைவேற்றுக! ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

24 Feb 2026, 3:55 pm
ஓட்டுநர்களின் கோரிக்கையை நிறைவேற்றுக!  ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>ஓட்டுநர்களின் கோரிக்கையை நிறைவேற்றுக! &nbsp;ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>கும்பகோணம், பிப்.24- &nbsp;ஓட்டுநர்களின் கோரி க்கையை நிறைவேற்ற ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி கும்பகோண த்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிலாளர் சங்கம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில், காந்தி பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோணம் மாநகர ஆட்டோ சங்கச் செயலாளர் ஆர். சங்கர் தலைமை வகித்தார். சாலைப் போக்குவரத்து மாவட்டச் செயலாளர் சுவாமிநாதன், ஆட்டோ சங்க மாநகரத் தலைவர் மகாராஜா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சாலை போக்குவரத்து மாநில பொருளாளர் பார்த்தசாரதி, மாவட்டத் தலைவர் ஜி. மணிமாறன், ஆட்டோ சங்க மாநிலக் குழு உறுப்பினர் ஆர். ஜெயக்குமார், கௌரவத் தலைவர் கா. செந்தில் குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் ம.கண்ணன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 13 ஆண்டுகளாக உயர்த்தப்பட்ட மீட்டர் கட்டணத்தை உயர் நீதிமன்ற உத்தரவுபடி உயர்த்திக் கொடுக்க வேண்டும். ஆட்டோக்களுக்கு 100 கிலோமீட்டர் வரை இயக்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. &nbsp;திருவாரூர் &nbsp;சிஐடியு திருவாரூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்களின் சங்கம் மற்றும் திருவாரூர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் சார்பாக, பழைய பேருந்து நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆ.அரிகரன் தலைமை வகித்தார். &nbsp;சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.கே.என். அனிபா, மாநிலக் குழு உறுப்பினர் இரா. மாலதி, சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.ஜி.ஆர். அப்துல் காதர், செயலாளர் எம்.கே. ஜெய்சங்கர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். &nbsp;ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.ராஜேந்திரன், மாவட்டப் பொருளாளர் என். அன்புமணி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். &nbsp;தஞ்சாவூர் &nbsp;தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், சாலை போக்குவரத்து சங்கம் (சிஐடியு) சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஆட்டோ சங்க மாநகரத் தலைவர் எம்.சந்திரசேகர் தலைமை வகித்தார். &nbsp;சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் சி. ஜெயபால், கௌரவத் தலைவர் எம்.வடிவேலன், மாவட்டப் பொருளாளர் பி.என். பேர்நீதி ஆழ்வார், துணை செயலாளர் கே.அன்பு, ஆட்டோ சங்க மாவட்டப் பொருளாளர் ராஜன், தரைக்கடை சங்கச் செயலாளர் ஆர்.மணிமாறன், ஆட்டோ சங்க மாநகரச் செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகரத் துணைத் தலைவர் தர்மராஜ் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.