உள்ளாட்சி ஊழியர் கோரிக்கைகளை நிறைவேற்றுக! தலைமைச் செயலாளரிடம் சிஐடியு நேரில் மனு
6 Jan 2026, 4:23 pm
<p><strong>உள்ளாட்சி ஊழியர் கோரிக்கைகளை நிறைவேற்றுக! தலைமைச் செயலாளரிடம் சிஐடியு நேரில் மனு</strong></p>
<p>சென்னை, ஜன. 6 - தமிழகத்தில் உள்ள மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரி யும் ஊழியர்களின் பல்வேறு கோரிக் கைகளை நிறைவேற்ற வலியு றுத்தி, சிஐடியு மாநில நிர்வாகிகள் செவ்வாயன்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகா னந்தத்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர். பணி நிரந்தரம் மற்றும் ஊதியக் கோரிக்கைகள் உள்ளாட்சி அமைப்புகளில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஊழியர்களைப் பணி நிரந் தரம் செய்ய வேண்டும் என்பதே இந்த சந்திப்பில் முக்கிய கோரிக் கையாக முன்வைக்கப்பட்டது. சிஐடியு தொடுத்த வழக்கில் நீதி மன்றம் அளித்த தீர்ப்பின்படி, அர சாணை 2டி 62-இன்கீழ் தூய்மைப் பணியாளர், குடிநீர் பணியாளர், ஓட்டுநர் மற்றும் டிபிசி ஊழியர் களுக்கு முறையான ஊதியம் நிர்ணயித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பொங்கல் போனஸ் மற்றும் ஓய்வூதியப் பலன்கள் தூய்மைக் காவலர்கள் மற்றும் டிபிசி ஊழியர்களுக்குப் பொங்கல் போனஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைவர்கள் கேட்டுக் கொண் டனர். மேலும், கிராம ஊராட்சி களில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்கு நர்கள் மற்றும் தூய்மைக் காவலர் களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணிக் கொடை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் மனுவில் இடம்பெற்றிருந்தது. சட்டமன்றத் தொடரில் அறிவிப்பு வெளியிட வலியுறுத்தல் ஜனவரி 20 ஆம் தேதி தொ டங்க உள்ள சட்டமன்றக் கூட்டத் தொடரில் இக்கோரிக்கைகள் தொடர்பாக புதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என வலி யுறுத்தப்பட்டது. இந்தச் சந்திப்பில் சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். கண்ணன், மாநிலச் செயலா ளர்கள் கே.சி. கோபிகுமார், கே. ரங்கராஜ், சம்மேளனப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்பிர மணியம் மற்றும் கிராம ஊராட்சி ஒருங்கிணைப்புக் குழு மாநிலத் தலைவர் ஏ.ஜி.சந்தானம் ஆகி யோர் பங்கேற்றனர். அரசின் உறுதிமொழி மனுவைப் பெற்றுக் கொண்ட தலைமைச் செயலாளர், உரிய துறைச் செயலாளர்களிடம் ஆலோ சித்து அரசாணையின்படி ஊதியம் வழங்கவும், பொங்கல் கருணைத் தொகை அளிக்கவும் விரைந்து நட வடிக்கை எடுப்பதாகத் தெரிவித் தார். இதனைத் தொடர்ந்து, நக ராட்சி நிர்வாகத் துறைச் செயலா ளர் கார்த்திகேயன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி ஆகியோரையும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.</p>
