எரிபொருள் விலைகளும் ஏமாற்றும் பாஜகவும்! - க.கனகராஜ்
9 Mar 2026, 4:24 pm
<p><strong>எரிபொருள் விலைகளும் ஏமாற்றும் பாஜகவும்!</strong></p>
<p>ஒன்றிய பாஜக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் (2017-ல்) பெட்ரோலியப் பொருட்களின் விலை களை கட்டுப்பாட்டிலி ருந்து நீக்குகிறோம் என்று அறிவித்தது. சர்வ தேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கூடி னால் பெட்ரோலியப் பொருட்களின் விலை கூடும், விலை குறைந்தால் குறையும் என்பதே இந்த மாற்றத்தின் நோக்கமாகச் சொல்லப்பட்டது. “அரசு ஏன் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்? சந்தையே தீர்மானிக்கட்டும்” என்று அப்போது கம்பி கட்டினார்கள். சர்வதேச சந்தையில் விலை குறையும்போது நமக்கும் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று பெரும்பாலான மக்களும் நம்பினார்கள். 2017-இல் இத்திட்டம் அமல்படுத்தப்பட்ட தொடக்க மாதங்களில், கச்சா எண்ணெய் விலைக் கேற்ப விலையை ஏற்றியும் இறக்கியும் நேர்மை யாகச் செயல்படுவது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கினார்கள். ஒரு தரப்பினர் இவர்களை “நேர்மையாளர்” என்று கொண்டாடினர். இடதுசாரிகளின் எச்சரிக்கை ஆனால், இந்தத் திட்டம் ஒரு மோசடி என்று அப்போதே இடதுசாரிகள் எச்சரித்தோம். “ஆரம்பத்தில் இப்படித்தான் செய்வார்கள்; பிறகு கச்சா எண்ணெய் விலை ஏறினால் பெட்ரோல் விலையை ஏற்றுவார்கள், ஆனால் விலை குறைந் தால் குறைக்க மாட்டார்கள்” என்று சொன்னோம். அப்போது சங்பரிவார் அமைப்புகளும், அவர் களை ஆதரித்த நடுநிலையாளர்கள் என்று தங் களைக் கூறிக்கொண்டவர்களும் “கம்யூனிஸ்ட்டு களுக்கு எப்போதும் குறை சொல்வதே வேலை” என்று நக்கலடித்தார்கள். ஊடகங்களும் இந்த மோசடிக்குத் துணை போயின. கச்சா எண்ணெய் விலை குறைந்த போது பெட்ரோல் விலை குறையாமல் இருந்த தை, மிகத் தந்திரமாக “விலை உயர்வின்றித் தொடர்கிறது” அல்லது “மாற்றமின்றித் தொடர்கிறது” என்று செய்திகள் வெளியிட்டார்கள். “விலைக் குறைப்பின்றி” என்று போடுவதற்குப் பதி லாக, “விலை உயர்வின்றி” என்று சொல்வது அப்பட்டமான மோசடி இல்லையா என்று கேட்ட போது, முதலாளித்துவ செய்தி நிறுவனங்கள் அதைத் தவிர்க்கவே செய்தன. கொள்ளையடிக்கும் மோடி அரசு இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் ரூ. 60 உயர்த்தப்பட்டிருக்கிறது. பற்றாக் குறை ஏற்பட்டுள்ளதாகக் காரணம் சொல்கிறார் கள். பற்றாக்குறை ஏற்பட்டால் தட்டுப்பாடுதான் வருமே தவிர, விலை ஏன் உயர வேண்டும்? தட்டுப்பாடு குறித்த பயத்தை உருவாக்கி அரசே மக்களிடம் கொள்ளையடிக்கிறது. மோடி அரசாங்கம் கார்ப்பரேட்டுகளுக்கான அரசாங்கம் என்பதால், அரிசிக்கு 5% ஜி.எஸ்.டி போட்டுவிட்டு, பெரும் நிறுவனங்களுக்கு 8% வரியைக் குறைக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தபோதும், இந்திய மக்களிடம் இந்த அரசு எவ்வளவு கொள்ளை யடித்திருக்கிறது என்பதைப் பின்வரும் தரவுகள் தெளிவாக விளக்குகின்றன. (பட்டியலைப் பார்க்க) இப்படித்தான் மோடி தலைமையிலான பாஜக அரசின் ஒவ்வொரு கொள்கையும் சாமானிய மக்களை வஞ்சிப்பதாக இருக்கிறது. இந்த பகற்கொள்ளையிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே ‘விக்சித் பாரத்’, ‘2047 இலக்கு’, ‘மதவெறி’ எனப் பல்வேறு மாயத் திரைகளை உருவாக்கி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மக்களின் ரத்தத்தை உறிஞ்சி அதன் மூலம் அரசியல் லாபம் தேடும் இந்த நிலையை மக்கள் உணர வேண்டும்.</p>
<p> </p>
