எரிபொருட்கள் விலை உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தல்
17 May 2026, 11:03 pm
<p><strong>எரிபொருட்கள் விலை உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தல்</strong></p><p>கோவை, மே 17- பெட்ரோல், டீசல், சமையல் எரி வாயு ஆகியவற்றின் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என சிஐடியு ஏபிடி பார்சல் சர்வீஸ், ஏஆர்சி என்ஐஏ குரூப் கம்பெனிஸ், ஒர்க்கர்ஸ்-ஸ்டாப் யூனியன் வலியு றுத்தியுள்ளது. கோவை காட்டூரில் உள்ள மில் சங்க அலுவலகத்தில், தோழர் எஸ்.ஆறுமுகம் நினைவரங்கத்தில் சிஐடியு ஏபிடி பார்சல் சர்வீஸ், ஏஆர்சி என்ஐஏ குரூப் கம்பெனிஸ், ஒர்க்கர்ஸ்-ஸ்டாப் யூனியன் 42 ஆம் ஆண்டு மகாசபை கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. சங்கத் தின் தலைவர் எம்.அருணாசலம் தலைமை வகித்தார். பொதுச்செய லாளர் ஆர்.ஆறுமுகம், பொருளா ளர் கே.செவந்தியப்பன் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். இக்கூட்டத்தில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும். புதிய சம்பள உயர்வு பேச்சுவார்த் தையை விரைந்து முடிக்க ஏபிடி நிர் வாகம் முன் வர வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அப்போது, மகாசபையில் கலந்து கொண்ட சங்க நிர்வாகிக ளிடம், உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் போராடும் தொழிலா ளர்களுக்காக நிதி சேகரிக்கப்பட் டது. இதைத்தொடர்ந்து, சங்கத் தின் கௌரவத் தலைவராக எம். அருணாச்சலம், தலைவராக கே. செவ்வந்திப்பன், பொதுச்செயலா ளராக ஆர்.ஆறுமுகம், பொருளா ளராக ஜெ.ஜெயகுமார் உட்பட 36 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சங்க பொறுப்பாளர் ஆர்.வேலுசாமி நிறைவுரையாற்றினார். திருச்சி கிளை நிர்வாகி ராகவன் நன்றி கூறி னார்.</p>
