எரிபொருள் விலை உயர்வால் பழங்கள் காய்கறிகளின் விலை மேலும் உயரக்கூடும்
18 May 2026, 12:01 am

எரிபொருள் விலை உயர்வால் பழங்கள் காய்கறிகளின் விலை மேலும் உயரக்கூடும்

சென்னை,மே 16- சமீபத்திய எரிபொருள் விலை உயர்வு, வரும் நாட்க ளில் நகரில் காய்கறி மற்றும் பழங்களின் விலையை அதிகரிக்கச் செய்யக்கூடும் என்ற கவலையை ஏற்படுத் தியுள்ளது.

போக்குவரத்துச் செலவு அதிகரிப்பதால், சில்லறை விற்பனை விலை விரைவில் உயரக்கூடும் என்று கோய ம்பேடு சந்தையின் மொத்த வியாபாரிகள் தெரிவித்துள் ளனர்.

வரத்து குறைவு கார ணமாக ஏற்கனவே சில காய்கறிகளின் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், இந்த எரிபொருள் விலை உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

குடும்ப பட்ஜெட்டில் விழும் அடி இந்த விலை உயர்வு தங்களின் அன்றாட பட் ஜெட்டைப் பாதிக்கும் என்று பொதுமக்கள் அச்சப்படு கின்றனர்.

அத்தியாவசியத் தேவைகளுக்கான செலவு களைச் சமாளிக்க, தங்களின் பயணங்கள் மற்றும் பொழுதுபோக்குச் செலவுகளைக் குறைக்கத் திட்டமிட்டு வருவதாகப் பொதுமக்கள் தெரிவிக் கின்றனர்.

எரிபொருள் விலை உயர்வு என்பது போக்குவரத்து, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் என அனை த்தின் மீதும் சங்கிலித் தொடர் போலப் பாதிப்பை ஏற்படுத் தும் என்று அவர்கள் கவலை ப்படுகிறார்கள்.

வருமானம் மாறாமல் இருக்கும் நிலையில், அன்றா டச் செலவுகள் தொடர்ந்து அதிகரிப்பது நடுத்தரக் குடும்பங்கள் தங்களின் மாதாந்திர பட்ஜெட்டைச் சமாளிப்பதையும், ஆரோக் கியமான வாழ்க்கை முறை யைப் பேணுவதையும் கடின மாக்கியுள்ளது என்றும் பொதுமக்கள் ஆதங்கப்படு கின்றனர்.

லாரி வாடகை உயர்வு லாரி உரிமையாளர்கள் வாடகையை உயர்த்துவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால், இந்த எரி பொருள் விலை உயர்வின் தாக்கம் காய்கறி விலை களில் பிரதிபலிக்க இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்று கோயம்பேடு மொத்த சந்தை வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஜி. ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

மேலும், காய்கறிகளின் விலை தினசரி வரத்து மற்றும் தேவையைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது என்றும், போக்குவரத்துச் செலவு அதிகரிப்பது வியா பாரிகளையும் விவசாயி களையும் ஒருசேரப் பாதிக் கும் என்றும் அவர் குறிப் பிட்டார்.

கோயம்பேடு காய்கறி, பழங்கள் மற்றும் மலர்கள் வியாபாரிகள் சங்கப் பொரு ளாளர் பி. சுகுமார் கூறுகை யில், மொத்த சந்தையி லேயே பீன்ஸ் கிலோ 110 ரூபாய்க்கும், கேரட் 60 முதல் 60 ரூபாய்க்கும், அவரைக் காய் 60முதல் 70 ரூபாய்க்கும் அதிக விலைக்கு விற்கப்படுவதாகத் தெரி வித்தார்.

லாரி உரிமை யாளர்கள் போக்குவரத்துச் செலவை 5 முதல் 10 விழுக்காடு வரை உயர்த்த வாய்ப்புள்ளதால், சில்லறை விற்பனை விலையும் குறைந்தது 5 விழுக்காடு வரை உயரக்கூடும் என்றும் அவர் கூறினார்.

பழங்கள் சந்தையில் ஏற்படும் தாக்கம் அதே நேரத்தில், கோயம்பேடு சந்தைக்குப் பழங்கள் பெரும்பாலும் சிறிய ரக வாகனங்களில் வரு வதால் இதன் தாக்கம் சற்று குறைவாகவே இருக்கும் என்று மொத்த பழ வியாபாரிகள் எதிர்பார்க்கின் றனர்.

ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மற்றும் புலி வெந்துலாவில் இருந்து சாத்துக்குடி கொண்டு வரும் லாரிகள், ஒரு நடைக்கான வாடகையை 1500 முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தக்கூடும் என்று கோயம்பேடு பழ கமிஷன் முகவர்கள் சங்கத் தலைவர் சென்னை எஸ். சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது மொத்த விலை சந்தையில் பெரிய பாதிப்பை ஏற்படுத் தாது என்றாலும், சில்லறை விற்பனை விலையை ஐந்து சதவீதம் வரை உயர்த்தக் கூடும் என்றும் அவர் தெரி வித்தார்.