எரிபொருள் விலை உயர்வுக்கு கண்டனம்
19 May 2026, 1:15 am

எரிபொருள் விலை உயர்வுக்கு கண்டனம்

ஒன்றிய மோடி அரசால் உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து, செங்கல்பட்டில் தலைமை தபால் நிலையம் அருகில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொமுச மாநிலத் துணைத் தலைவர் பொன்ராம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி செயலாளர் ஜஹாங்கீர், சிஐடியு மாவட்ட தலைவர் மாசிலாமணி, மாவட்ட செயலாளர் பகத்சிங்தாஸ், உள்ளிட்ட பலர் பேசினார்.

பெட்ரோல், டீசல், கேஸ் விலை ஏற்றத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெறக் வலிறுத்தி செய்யூர் வட்டம் சூனாம்பேடு பேருந்து நிலையத்தில் சிபிஎம் வட்டக் குழு உறுப்பினர் இ.ராமமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், வட்ட செயலாளர் க.புருஷோத்தமன், மாவட்ட குழு உறுப்பினர் பள்ளி கண்ணன் உள்ளிட்ட பலர் பேசினர்.

பெட்ரோல் டீசல் கேஸ் விலை ஏற்றத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி திருக்கழுக்குன்றம் வட்டக் குழு சார்பாக டி.ஏகாம்பரம் தலைமையில் புதுப்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். கலைச்செல்வி.வட்டச் செயலாளர்.பி.கே.ரபீக் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சிஐடியு, ஏஐடியுசி ஆகிய தொழிற்சங்கங்கள் இணைந்து திங்களன்று (மே18) ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மாவட்ட பொருளாளர் என். ரமேஷ் தலைமையில் செயலாளர் ஆ. தவராஜ், சிபிஎம் தாலுகா செயலாளர் ஜி. மதியழகன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் பி. மணி, அரசு போக்குவரத்து சம்மேளனம் மாவட்ட தலைவர் கே. ரவிச்சந்திரன், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ஏ.எஸ். சங்கர் மேஸ்திரி, நிர்வாகிகள் பாலு, சாம்பசிவம், ஊரக உள்ளாட்சித் துறையின் மாவட்ட கவுரவத் தலைவர் ஏபிஎம். சீனிவாசன் கண்டன உரையாற்றினர்.