எரிபொருட்கள் விலை உயர்வு; ஆர்ப்பாட்டம்
25 May 2026, 11:17 pm
<p><strong>எரிபொருட்கள் விலை உயர்வு; ஆர்ப்பாட்டம்</strong></p><p>சேலம், மே 25- எரிபொருட்கள் விலை உயர்வை கண்டித்து இடது சாரி கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வால் பொதுமக்கள் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ள னர். இதற்கு காரணமான ஒன்றிய அரசை கண்டித்தும், உடனடியாக விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம் யூனிஸ்ட் கட்சியினர் திங்களன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஆத் தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி. இளங்கோ, ஏ.கலியபெருமாள், ஆத்தூர் தாலுகா செயலாளர் ஏ.முருகேசன், சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருப்பூர் எரிபொருட்களின் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் சார்பில் ஞாயிறன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. மிஷின் வீதி பகுதி யில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, வாலிபர் சங்க தெற்கு நகரத் தலைவர் செல்லமுத்து தலைமை வகித்தார். இதில் சிபிஎம் தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், சிஐடியு ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் சுகுமார், வாலிபர் சங்க தெற்கு மாநகரச் செயலாளர் மவுனிஷ் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
