தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எரிபொருட்கள் விலை உயர்வை கண்டித்து, மே 20 இல் ஆர்ப்பாட்டம்: இடதுசாரிகள் முடிவு

17 May 2026, 11:05 pm
எரிபொருட்கள் விலை உயர்வை கண்டித்து, மே 20 இல் ஆர்ப்பாட்டம்: இடதுசாரிகள் முடிவு
<p><strong>எரிபொருட்கள் விலை உயர்வை கண்டித்து, மே 20 இல் ஆர்ப்பாட்டம்: இடதுசாரிகள் முடிவு</strong></p><p>தருமபுரி, மே 17- பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மே 20 ஆம் தேதியன்று தருமபுரி யில் ஆர்ப்பாட்டம் நடத்து வதென இடதுசாரி கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தரும புரி மாவட்டக்குழு அலுவலகத்தில், இடது சாரி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஞாயி றன்று நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கலைச் செல்வம் தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், சிபிஐ மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.தேவராஜன், மாநிலக்குழு உறுப்பினர் புல்லாரு, சிபிஐ (எம்எல்) விடுதலை மாவட்டச் செயலாளர் கே.கோவிந்தராஜ் ஆகியோர் பங்கேற்று பேசினர். இக்கூட்டத்தில், பெட் ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியும், சிஎன்ஜி எரிவாயு கிலோ ரூ.2 உயர்த்தியிருப்பது மக்களின் அன்றாட வாழ்க்கை மீது மோடி அரசு தொடுத்துள்ள கொடூரமான தாக்குதல் ஆகும். போர் ஒரு புறம் உலக மக்களின் நிம்மதியை குலைக்கி றது எனில், அரசு தொடுக்கிற பொருளாதார போர் உள் நாட்டிலும் மக்களின் அமைதியை, நிம்மதியை சீரழிக்கின்றன. இதனை கண்டித்து மே 20 ஆம் தேதியன்று தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட் டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.