எரிபொருள் விலை உயருது...ஏழைகளின் வயிறு எரியுது... - ஆர்.பத்ரி
21 May 2026, 9:34 pm

எரிபொருள் விலை உயருது...ஏழைகளின் வயிறு எரியுது... - ஆர்.பத்ரி

“வாயையும் வயிற்றையும் கட்டுங்கள்; சிக்கனமாக இருக்கப் பழகுங்கள்; வீட்டிலிருந்தே வேலையைப் பாருங்கள்” என நாட்டு மக்களுக்கு ஆலோசனை சொல்லி விட்டு வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றுவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி.

பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு மூன்று ரூபாயும், வாகனங்கள் பயன்படுத்தும் சி.என்.ஜி. விலை லிட்டருக்கு மூன்று ரூபாயும், உண வகங்கள் பயன்படுத்தும் வணிக சிலிண்டர் விலை ரூ. 993 எனவும் விலைகளை உயர்த்தி யிருக்கிறது ஒன்றிய அரசு.

ஜூன் மாதம் முதல் வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்க ளின் விலையும் அதிகரிக்கும் எனச் சொல்லப் படுகிறது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, வளைகுடா நாடுகளில் பதற்றம், எண்ணெய்க் கம்பெனிகளுக்கு நஷ்டம் என்றெல்லாம் காரணங்களை அடுக்கி விலையை உயர்த்தி ஏழைகளின் மீதான பொரு ளாதாரத் தாக்குதலை மீண்டும் மீண்டும் தொடுக்கிறது பாஜக அரசு.

1. காதில் பூ... அதுவும் காகிதப்பூ

போர்ப் பதற்றத்தாலும், எண்ணெய் இறக்கு மதி பற்றாக்குறையாலும் விலைகள் உயர்ந்தால் அதிலிருந்து மக்களைப் பாது காப்பது எங்கள் பொறுப்பு.

ஆகவே ஒரு லட்சம் கோடி ரூபாய் சிறப்பு நிதித் தொகுப்பை உரு வாக்குகிறோம் எனப் படாடோபமாக அறி வித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அறிவிப்பின்படி சிறப்பு நிதியை ஒதுக்கி னார்களா? அப்படி ஒதுக்கியிருந்தால் ஏன் இந்த விலை உயர்வு? வழக்கம் போல இதுவும் வாயால் சுட்ட வடைதானா?

2. கம்பெனிகளுக்கு நஷ்டம்; மக்களுக்கு கஷ்டம்!

கச்சா எண்ணெய் பேரல் விலை 109 டாலராக உள்ளது.

தற்போது ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் ரூ. 14, டீசலுக்கு ரூ. 18 நஷ்டம் ஏற்படுவதாகவும், மேலும் கச்சா எண்ணெய் விலை ஒவ்வொரு டாலர் உயர்கிற போதும் லிட்டருக்கு 60 பைசா வீதம் நஷ்டம் ஏற்படுகிறது எனவும் கணக்குச் சொல்கின்றன எண்ணெய்க் கம்பெனிகள்.

இப்படியே போனால் 2027-இல் எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 80,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனவும் சொல்கிறார்கள்.

அப்படியெனில் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களின் நஷ்டத்தைச் சமாளிக்கத் தான் இத்தகைய விலை உயர்வா? நிறுவ னங்களும் நஷ்டத்திலிருந்து தப்பிக்க வேண்டும், ஒன்றிய அரசும் பொறுப்பேற்றுக் கொள்ளாது என்றால் என்னதான் தீர்வு? வாக்களித்த மக்களுக்கு ‘வாய்க்கரிசி’ போடுவதுதான் இரட்டை எஞ்சின் சர்க்காரின் கொள்கையா?

3. ஆப் கீ பார் பிக்பாக்கெட் சர்க்கார்

“ஆப் கீ பார், மோடி கா சர்க்கார்” – உங்க ளுக்காக மீண்டும் மோடியின் அரசு எனச் சத்தமிட்டவர்களின் உண்மைக் கதை என்ன தெரியுமா? மோடி முதன்முறை பிரதமராக வந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 115 டாலர்.

அந்த மாதத்தில் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 71.41 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 55.49 ஆகவும் இருந்தது.

ஆனால், அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் சடசடவென விலை குறைந்து பேரல் கச்சா எண்ணெய் விலை 60 டாலராக ஆனது.

இருப்பினும் ஒன்றிய அரசு பெட்ரோலி யப் பொருட்களின் விலையைக் குறைக்கவே யில்லை.

மாறாக வரிகளை உயர்த்தி விலை குறையாமல் பார்த்துக்கொண்டது. ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும், டீசலுக்கும் மக்கள் தந்த பணத்தைக் கொண்டு தனது கஜா னாவை நிரப்பிக்கொண்டது மோடி சர்க்கார். அப்படியாகப் பதினொரு ஆண்டுகளில் மக்களி டமிருந்து பாஜக அரசு எடுத்துக்கொண்ட தொகை எவ்வளவு தெரியுமா? 40 லட்சம் கோடி ரூபாய்.

இவ்வளவு பெரிய தொகையை மக்களிடமிருந்து பறித்த அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் சிறப்பு நிதியை ஒதுக்கிட மனமில்லை.

ஏனெனில் இவர்கள் கார்ப்ப ரேட்டுகளின் காவலர்கள், மக்களின் எதிரிகள்.

4. ஜென்டில்மேன் அரசு – ஒரு பிளாஷ் பேக் ஸ்டோரி

கட்சி மோசமானதுதான், ஆனால் அவர் ஒரு ஜெண்டில்மேன் என ஒரு சிலரால் சான்றளிக்கப்பட்டவர் வாஜ்பாய்.

அவர் காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு மோச மான முடிவால்தான் இன்றளவும் மக்கள் அவதிப்படுகிறார்கள்.

அன்றைக்கு எண்ணெய் தொகுப்பு நிதி என 30,000 கோடி ரூபாய் நிதி வைக்கப்பட்டிருந்தது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் அதனால் மக்கள் பாதிப்படையக் கூடாது எனும் வகையில், எண்ணெய் தொகுப்பு நிதியைக் கொண்டு விலை உயர்வு ஈடுசெய்யப்பட்டது.

இதனால் மக்களுக்குப் பாதிப்பில்லாமல் இருந்தது. இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டு மெனில், எண்ணெய் தொகுப்பு நிதி என்பது வாகனங்களில் உள்ள ‘ஷாக் அப்சார்பர்’ (அதிர்வைக் கட்டுப்படுத்தும் கருவி) மாதிரியானது. ப

யணத்தின்போது அதிர்வுக ளிலிருந்து பயணிகளைக் காப்பாற்றுவது அக்கருவியின் பணியாகும். அப்படியான தொரு எண்ணெய் தொகுப்பு நிதியை முற்றாகக் கைவிட்டு, ‘அட்மினிஸ்ட்ரேட்டிவ் பிரைசிங் மெக்கானிசம்’ (Administrative Pricing Mechanism) எனும் முறையை, அதாவது சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப மக்கள் காசு கொடுக்கட்டும் எனும் ஆபத்தான முடிவை எடுத்தவர் அந்த ஜெண்டில்மேன்தான்.

அன்றிலிருந்து இன்று வரையிலும் பாஜகவின் பொருளாதாரக் கொள்கைகள் ஒவ்வொன்றும் மக்களுக்கு எதிரானதே என்பதற்குப் பலப்பல ஆதாரங்கள் உள்ளன.

5. விதியே என்றிருக்காமல் வீதியில் இறங்குவோம்!

நாம் போராடினால் மட்டும் விலையைக் குறைக்கப் போகிறார்களா என்ன என விரக்தியோடு பேசுவதால் பலனேதும் கிட்டப் போவதில்லை.

அல்லது விலையைக் குறைக்க வேண்டும் என வெறுமனே லெட்டர்பேடு அறிக்கைகளோடு ஒதுங்கிக்கொள்வதாலும் தீர்வு கிடைக்கப்போவதில்லை.

அனைத்துத் தரப்பினரும் வேற்றுமைகளைக் களைந்து வீதியில் இறங்கிப் போராட வேண்டிய தருணம் இது.

ஆம், வீதிகளில் ஒலிக்கும் நம் ஒவ்வொருவருடைய குரலும் ஆட்சியதி காரத்தின் காதுகளுக்கு எட்ட வேண்டும்.

ஒவ்வொரு தருணத்திலும் அரசாங் கங்களை அதிரச் செய்யும் போராட்டங்களை முன்னெடுக்கும் கம்யூனிஸ்டுகள் இம்முறை யும் இதோ களத்தில் நிற்கிறார்கள்.

“ஒன்றிய அரசே, ஏழைகளைப் பாதிக்கும் எரிபொருள் விலைகளைக் குறைத்திடு” எனும் கோரிக்கை யோடு அனைவரையும் அறைகூவி அழைக்கிறார்கள்.

விதியே என்றிருக்காமல் வீதியில் இறங்கிப் போராடுவோம் எனும் கம்யூனிஸ்டுகளின் குரலோடு உங்கள் குரலும் இணையட்டும். கோரிக்கைகள் வெல்லட்டும்.