தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எரிபொருள் விலை உயர்வால் முடங்கும் ‘வாட்டர் வாஷ்’ தொழில்

11 Jun 2026, 11:18 pm
எரிபொருள் விலை உயர்வால் முடங்கும் ‘வாட்டர் வாஷ்’ தொழில்

எரிபொருள் விலை உயர்வால் முடங்கும் ‘வாட்டர் வாஷ்’ தொழில்

நாமக்கல் மாவட்டம் என் றாலே கனரக வாகனப் போக்குவரத்தும் நிறைந்த பகுதி யாகும். இவற்றுக்கு இணையாக, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சுத்தப்படுத்தும் ‘வாட்டர் வாஷ்’ சேவைத் தொழி லும் முக்கிய சிறு தொழிலாக உள் ளது. ஆனால், தற்போதைய வர லாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வாகன ஓட்டிகளை மட்டுமன்றி இத்தொழிலை நம்பி யுள்ள நூற்றுக்கணக்கான சிறு, குறு தொழிலாளர்களையும் நடுத் தெருவுக்கு கொண்டு வந்துள்ளது. தொடர் எரிபொருள் விலை உயர்வால் நடுத்தர வர்க்கத்தினர் வாகனங்களை இயக்குவதே பெரும் சுமையாக மாறியுள்ளது. இதனால், மாதந்தோறும் முறை யாக வாகனங்களை சர்வீஸ் செய்து, வாட்டர் வாஷ் செய்து வந்த வாடிக் கையாளர்கள், தற்போது அதனை ஒரு ‘உபரிச் செலவாகக்’ கருதி முற்றிலும் தவிர்த்து வருகின்றனர். அத்தியாவசியத் தேவைக்கு மட் டுமே வாகனங்களை எடுப்பதால், பராமரிப்புக்கான ஆர்வம் மக்களி டம் வெகுவாகக் குறைந்துள்ளது.

கல்லூரி வாகனங்கள் வருகையும் சரிவு

வழக்கமாக ஏப்ரல், மே மாத கோடை விடுமுறைக்குப் பின், பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக் கப்படும் முன்பாக பேருந்துகள், வேன்கள் உள்ளிட்டவை வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஆய் வுக்கு உட்படுத்தப்படும். இதற் காக, வாகனங்களின் பழுதுகளை நீக்கிவிட்டு, முழுமையாக சுத்தப் படுத்த கல்வி நிறுவனங்கள் சார் பில் நூற்றுக்கணக்கான வாகனங் கள் இம்மையங்களுக்கு கொண்டு வரப்படும். மே முதல் ஜூன் தொடக்கம் வரை இத்தொழிலில் ‘சீசன்’ காலமாக இது விளங்கியது. ஆனால், நடப்பாண்டில் எரிபொ ருள் செலவை கட்டுப்படுத்த கல்வி நிறுவனங்கள் திட்டமிட்ட தால், கல்வி நிறுவன வாகனங்க ளின் வருகையும் மிகக் கடுமை யான சரிவை சந்தித்துள்ளது. இதுகுறித்து பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த வாட்டர் வாஷ் கடை உரிமையாளர் விஸ்வநாதன் கூறுகையில்: ஒரே வாரத்தில் பெட் ரோல் விலை சுமார் 8 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. வண்டிக ளுக்கு டீசல் ஊற்றுவதே பெரும் பாடாக இருக்கும்போது, கழுவ எங்கே வருவார்கள்? வாடிக்கையா ளர்கள் வராத நிலையிலும், நாங் கள் பயன்படுத்தும் வாஷ் ஆயில் களின் விலையும் கணிசமாக உயர்ந்துவிட்டது. வரும் ஒரு சில வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்டால் மறுமுறை வர மாட்டார்கள் என்பதால், இருசக்கர வாகனத்திற்கு ரூ.120 முதல் ரூ.150 வரையும், கனரக வாகனங்களுக்கு ரூ.500 வரையும் மட்டுமே பழைய கட்டணத்தையே வாங்குகிறோம். கடை வாடகை, மின் கட்டணம், ஆட்கூலி, மூலப்பொருள் முதலீடு அனைத்தையும் தாண்டி ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதிப் பதே இப்போது சவாலாக உள்ளது, என்றார் எனவே, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்ப டுத்த நடவடிக்கை எடுக்க வேண் டும். மேலும், நலிவடைந்து வரும் வாட்டர் வாஷ் போன்ற சிறு, குறு தொழில்களை பாதுகாக்க கட னுதவி மற்றும் மானியங்களை வழங்கி, இத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நட்டாற்றில் விடாமல் காக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மேற்கு மண்டல சிறு வணிகர்களின் கோரிக்கையாக உள்ளது. -எம்.பிரபாகரன்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.