முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

25 May 2026, 8:55 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

சாமி. நடராஜன் அறிக்கை!

எண்ணெய் நெருக்கடி எதுவும் இல்லை ; அனைத்தும் சீராகவே இருக்கிறதென்றால் ; உலகளவில் கச்சா எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையிலும், பெட்ரோல் மற்றும் டீசல் ஏன் தொடர்ந்து விலை உயர்ந்துகொண்டே இருக்கின்றன?

ஊடகவியலாளர் சபா நக்வி

மேற்கு வங்கத்தின் புதிய அரசாங்கம் தொழுகை, குர்பானி, தடுப்புக்காவல் மையங்கள் உள்ளிட்ட வகுப்புவாத விவகாரங்களைச் சுற்றியே இருக்கிறது. சிறுபான்மையினரைச் சூழ்ந்து கொண்டு, அவர்களை ஏளனம் செய்து, வாழ்க்கையைத் துயரத்திற்குள்ளாக்குவதற்கான ஒரு தெளிவான திட்டத்துடன் பாஜக அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்தியாவின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், புரட்சியாளர்களைத் தந்த ஒரு மண்ணிலிருந்து இத்தகைய மிகக் கேவலமான சிந்தனையா?

ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா பார்தி

பீகாரில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. மக்கள் ஒரு நாளைக்கு 600-700 ரூபாய் சம்பாதித்துவிட்டு, தினமும் 40 கிலோமீட்டர் நடக்கிறார்கள். மோடி அரசு தனது சொந்த நலனுக்காக ஏன் மக்களைக் கொன்று கொண்டிருக்கிறது?

எழுத்தாளர் அருந்ததி ராய்

ஒரு காலத்தில் போர்களில் ஈடுபடுவதற்காக ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால் இன்று, ஆயுதங்களை விற்பனை செய்வதற்காகவே போர்கள் உருவாக்கப்படுகின்றன. இது நல்லதாக அமையாது.

Share
FacebookXWhatsAppTelegram