முந்தய பக்கம்

உணவுப் பொருட்களை பார்சல் செய்ய செய்தித்தாள்களை பயன்படுத்த வேண்டாம்!

8 Jun 2026, 10:38 am
உணவுப் பொருட்களை பார்சல் செய்ய செய்தித்தாள்களை பயன்படுத்த வேண்டாம்!
<p>உணவுப் பொருட்களை பார்சல் செய்வதற்கோ அல்லது நேரடியாக உணவுகளை மடித்து வழங்குவதற்கோ செய்தித்தாள்களை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் அச்சு மையில் பல்வேறு வேதிப்பொருட்கள், தீங்கு விளைவிக்கும் வண்ணங்கள், நிறமிகள் மற்றும் ஈயம் போன்ற கனிமங்கள் இருக்கக்கூடும் என்றும், அவை உணவுடன் கலந்தால் மனித உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.</p><p>குறிப்பாக சூடான மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுப் பொருட்களை செய்தித்தாள்களில் மடித்து வழங்கும்போது, அச்சு மையில் உள்ள நச்சுப் பொருட்கள் உணவில் கலக்கும் வாய்ப்பு அதிகம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>எனவே, உணவகங்கள், டீக்கடைகள், பேக்கரிகள் மற்றும் தெருவோர உணவுக் கடைகள் உள்ளிட்ட அனைத்து உணவு விற்பனையாளர்களும் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து, உணவுப் பயன்பாட்டிற்கு ஏற்ற பாதுகாப்பான பொருட்களையே பார்சலுக்கு பயன்படுத்த வேண்டும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram