மக்களை ஏமாற்றும் உணவு நிறுவனங்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்
19 Jun 2026, 8:54 pm

மக்களை ஏமாற்றும் உணவு நிறுவனங்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்

சபோலா சமையல் எண்ணெய், கிண்டர் ஜாய், பிளக் மாம்பழச் சாறு, மாஸ்டர்சௌ நூடுல்ஸ், பாராம் டெய்ரி உள்ளிட்ட முன்னணி நிறுவனங் களின் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் தங்களின் விளம்பரங்களி லும், பாக்கெட்டுகளிலும் நுகர்வோரை திசைதிருப்பும் வகையிலான பொய் வாக்குறுதிகளை அளிப்பதாக வந்த புகார்களை அடுத்து, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணை யம் (FSSAI - எப்எஸ்எஸ்ஏஐ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

என்ன காரணம்?

சபோலா சமையல் எண்ணெய் (மகா ராஷ்டிரா) பாக்கெட்டில் “ஹார்ட் ப்ரோ” என்ற வார்த்தையையும், இதயம் போன்ற படங்களையும் பயன்படுத்தியுள்ளது. இது இதயத்திற்கு ஏதோ கூடுதல் நன்மை தருவது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. மேலும், “குறைந்த எண்ணெய் உறிஞ்சும்” என்ற வாசகத் திற்கு அறிவியல் பூர்வமான ஆதாரத்தை காட்ட வேண்டும் என்று கோரியுள்ளது. அதே போல குழந்தைகள் விரும்பி உண்ணும் கிண்டர் ஜாயில் (இத்தாலி) அதிகப்படியான பால் சத்துக்கள் இருப்ப தாகக் கூறப்படும் விளம்பர வாசகம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பிளக் மாம்பழச் சாறில் (மகாராஷ்டிரா) 51% மாம்பழக்கூழும், 49% கரும்புச்சாறும் கலந்துள்ளது. கரும்புச்சாறில் இயற்கை யாகவே சர்க்கரை அதிகம் இருக்கும் நிலையில், பாக்கெட்டில் சர்க்கரை சேர்க்கப்படவில்லை என்று விளம்ப ரம் செய்தது கேள்விக்குள்ளாக்கப் பட்டுள்ளது.

மாஸ்டர்சௌ நூடுல்ஸ் (தில்லி) “100% இயற்கை”, “அன்றாடம் தயாரிக்கப் பட்டது” மற்றும் “ஆர்கானிக் மாவு” போன்ற இவர்களின் விளம்பர உரிமை கோரல்களுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

ஐஆர்சிடிசி ரயில்வே உணவகங்கள் மூலம் சப்ளை செய்யப்பட்ட பாராம் டெய்ரியின் (தில்லி) தயிர் மற்றும் ரப்ரி இனிப்பில் பூஞ்சை காளான் இருந்ததாக வந்த புகாரில் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. அதே போல ஒருசில புரோட்டின் பவுடர் நிறுவனங்களுக்கும் எப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.

நோட்டீஸில் விளம்பரங்களில் நுகர்வோரை ஏமாற்றும் வாசகங்களை நீக்க வேண்டும் ; சுகாதாரக் குறைபாடு களை உடனடியாகச் சரிசெய்து அதற் கான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண் டும் என எப்எஸ்எஸ்ஏஐ உத்தர விட்டுள்ளது.