தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பொருளாதார வளர்ச்சியில் முதலிடம் மகளிர் உரிமைத் தொகை முதல் ஓய்வூதியத் திட்டம் வரை!

20 Jan 2026, 2:46 pm
பொருளாதார வளர்ச்சியில் முதலிடம் மகளிர் உரிமைத் தொகை முதல் ஓய்வூதியத் திட்டம் வரை!
<p><strong>பொருளாதார வளர்ச்சியில் முதலிடம் மகளிர் உரிமைத் தொகை முதல் ஓய்வூதியத் திட்டம் வரை!</strong></p> <p>தமிழக சட்டமன்ற உரையில் அரசு பெருமிதம் சென்னை, ஜன.20 - தமிழக சட்டப்பேரவையின் 2026 ஆம் &nbsp;ஆண்டின் முதல் கூட்டத்தொடர் பெரும் &nbsp;அரசியல் பரபரப்புகளுக்கு இடையே தொ டங்கியது. அமைச்சரவை தயாரித்த உரை யில் சில பகுதிகளைத் தவிர்த்தும், தேசிய கீதம் முதலிலேயே இசைக்கப்படவில்லை என்றும் கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி அவை யிலிருந்து வெளியேறினார். இதைத் தொ டர்ந்து, பேரவைத் தலைவர் அப்பாவு ஆளு நர் உரையை வாசித்தார். மொழிப்போர் மற்றும் கல்விக்கொள்கை தமிழக அரசின் இருமொழிக் கொள்கை யில் எவ்வித சமரசமும் இல்லை என்பது உரை யில் மிக வலுவாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 1968 இல் அண்ணா வகுத்துத் தந்த வழியில் தமிழும் ஆங்கிலமும் மட்டுமே &nbsp;பயிற்று மொழிகளாகத் தொடரும். ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்ததால், தமிழகத்திற்கு வரவேண்டிய கல்வி நிதி நிறுத்தி வைக்கப்பட்ட போதி லும், இந்தி திணிப்பைத் தடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது. குறிப்பாக, உயர்கல்வி &nbsp;நிறுவனங்களில் &lsquo;மூன்றாம் மொழி&rsquo; என்ற பெயரில் மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் &nbsp;பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) முயற்சியை அரசு வன்மையாகக் கண்டித் துள்ளது. ஒன்றிய அரசின் நிதிப் புறக்கணிப்பு தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போடுவதாக உரை குற்றம் சாட்டியுள்ளது. * மெட்ரோ ரயில்: கோவை மற்றும் &nbsp;மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைகளை &nbsp;ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியுள்ளது &lsquo;மாற்றாந்தாய் மனப்பான்மை&rsquo; எனச் சாடப் பட்டுள்ளது. * நிதி முடக்கம்: ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழக அரசு 1.12 கோடி வீடுகளுக்குக் குடிநீர் &nbsp;இணைப்பு வழங்கியுள்ள நிலையில், அதற் கான ஒன்றிய அரசின் பங்கான ரூ.3,112 கோடியை வழங்காமல் இழுத்தடிப்பது சுட்டிக் காட்டப்பட்டது. * பேரிடர் நிதி: புயல் மற்றும் மழையி னால் ஏற்பட்ட சேதங்களுக்கு மாநில அரசு &nbsp;கோரிய நிதியில் மிகச் சொற்பமான தொகை யையே ஒன்றிய அரசு வழங்கியது ஏமாற்றம் அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. மகத்தான சமூக நலத் திட்டங்கள் * கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: 1.30 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங் கும் இத்திட்டம், நாட்டின் பிற மாநிலங்களுக்கு &nbsp;முன்னோடியாகத் திகழ்கிறது. இதற்காக &nbsp;இதுவரை ரூ.33,464 கோடி விடுவிக்கப் பட்டுள்ளது. * மகளிர் வேலைவாய்ப்பு: தொழிற்சா லைகளில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக் கையில் தமிழ்நாடு 40.3 சதவீதத்துடன் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. * புதுமைப் பெண் மற்றும் அரசுப் பள்ளிகள்: அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தால் உயர் கல்விச் சேர்க்கை அதிகரித்துள்ளது. மேலும், ரூ.900 கோடியில் அரசு கல்லூரி களின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு உள்ளது. பொருளாதார சாதனை மற்றும் தொழில் வளர்ச்சி முதலமைச்சரின் சீரிய முயற்சியால் தமிழ்நாடு 11.19% பொருளாதார வளர்ச்சியை &nbsp;எட்டியுள்ளது. இது கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத சாதனையாகும். கடந்த ஐந்தாண்டு களில் 1,176 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் &nbsp;ரூ.12.16 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட் டுள்ளன. இதன் மூலம் 36 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மின்னணுவியல் ஏற்றுமதியில் (Electronics Export) 41.2% பங்களிப்புடன் தமிழ்நாடு தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் &nbsp;நீர் மேலாண்மை * போக்குவரத்து: பொதுப் போக்கு வரத்தை மேம்படுத்த 6,871 புதிய பேருந்துகள் மற்றும் முதன்முறையாக 380 மின் பேருந்து கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. * நீர் மேலாண்மை: தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டத்தை ரூ.2,086 கோடியில் முடித்து, 56,000 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதி &nbsp;ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்திக்கடவு - அவி நாசி திட்டத்தின் மூலம் 1,045 நீர்நிலைகள் நிரப்பப்பட்டுள்ளன. * மின்சாரம்: உடன்குடி மற்றும் எண்ணூர் திட்டங்கள் மூலம் மின் உற்பத்தித் &nbsp;திறனை 7,000 மெகாவாட்டாக உயர்த்தப் பணி கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசு ஊழியர் மற்றும் மீனவர் நலன் அரசு ஊழியர்களின் 22 ஆண்டு கால கோரிக்கையான &lsquo;உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை&rsquo; அமல்படுத்த ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், இலங்கை கடற்படையின ரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர் களின் வாழ்வாதாரத்தைக் காக்க, ஒன்றிய அரசு பேச்சுவார்த்தைக் குழுவை மீண்டும் அமைத்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அரசியல் கண்டனங்கள் அமைச்சரவை தயாரித்த உரையை முறையாக வாசிக்காமல் ஆளுநர் வெளி யேறியது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என காங்கிரஸ் மற்றும் மதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.