கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து
7 Mar 2026, 2:36 pm
<p>கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து பணியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர களப் பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டத்தை மேயர் ஆர்.பிரியா சனிக்கிழமையன்று (மார்ச்7) ரிப்பன் கட்டட வளாகத்தில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.</p>
