போராட்டக் களத்திலிருந்து சட்டப்பேரவைக்கு... இடதுசாரிகளின் 12 பெண் சிங்கங்கள்!
21 Mar 2026, 2:42 pm
<p><strong>போராட்டக் களத்திலிருந்து சட்டப்பேரவைக்கு... இடதுசாரிகளின் 12 பெண் சிங்கங்கள்!</strong></p>
<p>கேரள அரசியலில் ஆணாதிக்கப் போக்கிற்குச் சவால் விட்டும், நவதாராள மயச் சுரண்டலுக்கு எதிராகவும் சமரசமற்ற போராட்டங்களை முன் ்னெடுத்து வரும் 12 பெண் ஆளுமைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இம்முறை தேர்தல் களத்தில் நிறுத்தியுள்ளது. வெறும் தேர்தல் முகங்களாக மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காக வீதிக்கு வந்து போராடித் தங்களை மெய்ப்பித்த இந்த ‘நிச்சயிக்கப்பட்ட வெற்றிக் கூட்டணி’ இதோ: l கே.கே. சைலஜா (பேராவூர்): கோவிட் பெருந்தொற்று காலத்தில் உலகமே வியந்து பார்த்த ‘கேரள மாதிரியின்’ முகமாகத் திகழ்ந்தவர். l ஆர். பிந்து (இரிஞ்ஞாலகுடா) & வீணா ஜார்ஜ் (பத்தனம்திட்டா): அமைச்சர்களாகத் தங்கள் துறைகளில் முத்திரை பதித்தவர்கள். l கே. சாந்தகுமாரி (கொங்கோடு) & ஓ.எஸ். அபிகா (ஆற்றிங்கல்): அடித்தட்டு மக்களின் குரலாக ஒலிப்பவர்கள். l டெலீமா ஜோஜோ (அரூர்) & யு. பிரதிபா (காயம்குளம்): தொகுதியின் நம்பிக்கைக்குரிய மக்கள் பிரதிநிதிகள். l பி.கே. சியாமளா (தளிப்பறம்பா), டாக்டர் பி. ஜிஜி (கொண்டோட்டி), கே. பிரீத்தி (கோட்டக்கல்), வழக்கறிஞர் எம்.பி. ஷைனி (வைப்பின்) மற்றும் புஷ்பா தாஸ் (திருக்காக்கரை): இவர்கள் அனைவரும் கல்வி, சட்டம் மற்றும் சமூகப் போராட்டக் களங்களில் எளிய மக்களின் நலனுக்காக உழைப்பவர்கள். </p>
