நந்தனார் முதல் சகஜானந்தா வரை - சமத்துவப் போராட்டத்தின் சாட்சியமாக ஓமக்குளம்!
24 Jan 2026, 3:38 pm
<p><strong>நந்தனார் முதல் சகஜானந்தா வரை - சமத்துவப் போராட்டத்தின் சாட்சியமாக ஓமக்குளம்!</strong></p>
<p>பக்தி என்பது வெறும் வழிபாடாக மட்டு மல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுத லைக்கான ஆன்ம பலமாகத் திகழ்ந்த தற்குச் சான்றாக அமைகிறது நந்தனார் மற்றும் சுவாமி சகஜானந்தாவின் வரலாறு. கடலூர் மாவட்டம் ஆதனூரில் உழைக்கும் மக்களின் அடையாளமாக வாழ்ந்த நந்தனார், ஆன்மிகப் பாதையில் சமூக மாற்றத்திற்கான விதைகளை அன்றே விதைத்தவர். வழிபாட்டு உரிமையும் நிலப்பிரபுத்துவ தடைகளும் நந்தனார் வாழ்ந்த காலத்தில், பட்டியலின மக்கள் கோயிலுக் குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. ‘நாளைப் போகலாம்’ (திருநாளைப் போவார்) என்ற அவரது ஏக்கத்தின் பின்னால், உழைப்பைச் சுரண்டும் நிலப் பிரபுத்துவ அமைப்பின் அடக்குமுறை இருந்தது. தனது பண்ணையாரின் 240 ஏக்கர் நிலத்தை ஒரே இரவில் அறுவடை செய்ய வேண்டும் என்ற சாத்தியமற்ற நிபந்தனை, உழைக்கும் வர்க்கத்தின் மீதான ஆதிக்கத்தின் வெளிப்பாடே தவிர வேறல்ல. அந்தத் தடைகளைத் தாண்டி, தனது பக்தியின் மூலம் சமூகச் சுவர்களை அவர் தகர்க்க முனைந்தார். ஒரு குறியீட்டு எதிர்ப்பு நந்தனார் தீக்குள் புகுந்து வந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வை ஒரு முற்போக்கு நோக்கில் பார்க்கையில், அது அன்றைய வைதீகச் சமூகம் விதித்த மிகக்கடுமையான சோதனைகளையும் கடந்து, சமத்து வத்தை நிலைநாட்ட அவர் மேற்கொண்ட வீரமிக்கப் போராட்டமாகக் கருதலாம். தீ என்பது இங்கே தூய்மைக்கான அடை யாளமாக மட்டுமன்றி, சமூக அநீதிக ளுக்கு எதிராக எரியும் ஒரு புரட்சிக் கன லாகவும் பார்க்கப்படுகிறது. சுவாமி சகஜானந்தாவின் கல்விப் புரட்சி நந்தனாரின் சமத்துவக் கனவை நடைமுறைப்படுத்தியவர் சுவாமி சகஜானந்தா. ஆன்மிகத்தைப் போதிப்ப தோடு நின்றுவிடாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு ‘கல்வியே பேராயுதம்’ என்பதை உணர்ந்தவர் அவர். ஓமக்குளம் பகுதியில் தங்கி, நந்தனார் பெயரில் பள்ளிகளை உருவாக்கி, ஆயிரக் கணக்கான விளிம்புநிலை மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றினார். சட்ட மேலவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து, கல்வி மற்றும் சமூக உரிமை களுக்காக அவர் ஆற்றிய பணிகள் மகத் தானவை. சமத்துவக் குடமுழுக்கு தற்போது சிதம்பரம் ஓமக்குளம் பகுதி யில் அமைந்துள்ள நந்தனார் மடம் மற்றும் சிவலோகநாதர் கோயிலில் நடைபெற வுள்ள குடமுழுக்கு விழா, வெறும் சடங்காக இல்லாமல் சமூக நல்லி ணக்கத்தின் அடையாளமாகப் பார்க்கப் பட வேண்டும். குறிப்பாக, கல்விப் புரட்சி யாளர் சுவாமி சகஜானந்தாவின் பிறந்த நாளான ஜனவரி 27-இல் தொடங்கி நடை பெறும் இந்த விழா, உழைக்கும் மக்களின் உரிமையை மீண்டும் பறைசாற்றுகிறது. நந்தனாரின் பக்தியும் சகஜானந்தா வின் கல்விப் பணியும் இணையும் ஓமக் குளம், இன்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட உணர்வின் மையமாகத் திகழ் கிறது. சாதிப் பிரிவினையற்ற சமத்துவச் சமுதாயத்தை உருவாக்குவதே இவர்க ளுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக அமையும் என்பதால் குட முழக்கு விழாவில் பெருந்திரளான மக்கள் பங்கேற்க உள்ளனர்.</p>
