முந்தய பக்கம்

இலவச பிரிட்ஜ் முதல் ரூ.2000 வரை...

24 Mar 2026, 3:23 pm
இலவச பிரிட்ஜ் முதல் ரூ.2000 வரை...
<p><strong>இலவச பிரிட்ஜ் முதல் ரூ.2000 வரை...</strong></p> <p>சென்னை, மார்ச் 24- 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி &nbsp;297 வாக்குறுதிகள் அடங்கிய தனது முழுமை யான தேர்தல் அறிக்கையை செவ்வாயன்று வெளி யிட்டுள்ளார். வாக்காளர்களைக் கவர, எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள இலவசங்களின் பட்டியல், &nbsp;பார்ப்பவர்களின் கண்களை சுழல வைக்கிறது! வீட்டுக்கு ஒரு &lsquo;இலவச பிரிட்ஜ்&rsquo; அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே பளபளக்கும் அறிவிப்பு இதுதான்: அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு &lsquo;இலவச குளிர்சாதனப் பெட்டி&rsquo; வழங்கப்படும்! ஏற்கனவே கையில் காசில்லாமல் தக்காளிக்கும், வெங்காயத்திற்கும் மக்கள் தவம் இருக்கும்போது, இலவச பிரிட்ஜை &nbsp;வாங்கி மக்கள் அதில் எதை வைப்பார்கள் என்று &nbsp;சமூக வலைதளங்களில் நையாண்டிகள் பறக் கின்றன. ஒருவேளை, காய்கறி விலையேற்றத்தை மக்கள் ஜீரணிக்க முடியாமல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக இருக்குமோ என்றும் எள்ளி நகையாடுகின்றனர். ஸ்கூட்டர் மானியம் &nbsp;குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 &nbsp;உதவித்தொகை. வருடத்திற்கு 3 இலவச கேஸ் சிலிண் டர்கள். 5 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர் வாங்க ₹25,000 மானியம். விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட குடும்பங் களுக்கு ரூ.10,000 சிறப்பு உதவித்தொகை என்றும் அறிவித்துள்ளார். நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500 மற்றும் கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,500 ஆதார விலை, விவசாயக் கடன்கள் தள்ளுபடி போன்ற &nbsp;வாக்குறுதிகளும் இதில் உள்ளன. அம்மா மினி கிளினிக் முதல் லேப்டாப் வரை இவை தவிர, அரசுப் பள்ளி மாணவர்களுக் கான மருத்துவ ஒதுக்கீடு 10 சதவீதமாக உயர்வு, கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப், மூடப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் மீண்டும் &nbsp;திறப்பு போன்ற அறிவிப்புகளும் இடம்பெற்று உள்ளன. பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம், வீட்டுமனை, வட்டி இல்லாக் கடன் போன்ற சலு கைகள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும், போலீசாருக்கு வார விடுமுறை போன்ற அறிவிப்புகளும் இதில் அடக்கம்.</p>
Share
FacebookXWhatsAppTelegram