தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

29 May 2026, 8:45 pm
விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் சீன வீராங்கனை வாங் அபாரம்

களிமண் தரையில் நடை பெறும் ஒரே கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் 96ஆவது சீசன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடை பெற்று வருகிறது. இந்த தொடரில் வெள்ளியன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்று ஆட்டத்தில் தர வரிசையில் இல்லாத வீராங்கனை களான சீனாவின் வாங் - உக்ரைனின் யூலா ஆகியோர் மோதினர். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சீனாவின் வாங் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று, 3ஆவது சுற்றுக்கு முன்னேறினார். அதே போல உக்ரை னின் கோஸ்டிக்கும் 3ஆவது சுற்றுக்கு முன்னேறினார். 3ஆவது சுற்றில் பெரட்டினி ஆடவர் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்றில் தரவரிசையில் இல்லாமல் கள மிறங்கிய முன்னணி வீரரான இத்தாலி யின் மேட்டியோ பெரட்டினி, தரவரிசை யில் 22ஆவது இடத்தில் உள்ள பிரா ன்சின் ஆர்தர் ரிண்டர்நெக்கை 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 3ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

டென்னிஸ் உலகமே எதிர்பார்க்காத ஆட்டம்

பிரெஞ்சு ஓபன் தொடரின் ஆட வர் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்று ஆட்டத்தில் (வியாழனன்று நடை பெற்றது) டென்னிஸ் உலகின் முதல்நிலை வீரரும், 4 கிராண்ட்ஸ் லாம் பட்டம் வென்றவருமான இத்தாலி யின் ஜானிக் சின்னரும், தரவரிசை யில் இல்லாத அர்ஜெண்டினாவின் ஜுவன் மானுவல் செருண்டோ லோவும் மோதினர். இதில் ஜுவன் மானுவல் பெரியளவில் நட்சத்திர வீரர் அல்ல. ஆனால் அவரது ஆட்டம் டென்னிஸ் உலகிற்கே அதிர்ச்சி அளித்த ஆட்டமாக மாறியுள்ளது. காரணம் இந்த ஆட்டத்தின் முதல் 2 செட்களை சின்னர் 6-3, 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தார். இத னால் கடைசி செட்டையும் எளிதாக கைப்பற்றி, சின்னர் 3ஆவது சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அர்ஜெண்டினாவின் ஜுவன் மானுவல் எந்த எண்ணத்துடன் 3ஆவது சுற்றில் களமிறங்கினார் என்று தெரியவில்லை. கடைசி 3 செட்டில் ருத்ரதாண்டவம் ஆடினார். இறுதியில் 3-6, 2-6, 7-5, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் ஜுவன் மானு வல் கலக்கல் வெற்றியுடன் 3ஆவது சுற்றுக்கு முன்னேறினார். டென்னிஸ் உலகமே எதிர்பார்க்காத இந்த ஆட்டத்தின் ஹைலைட்ஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆசிய விளையாட்டு தகுதிச் சுற்றில் வினேஷ் போகத் பங்கேற்க உச்சநீதிமன்றம் அனுமதி

தாய்மையான பின்பு ஓய்வி லிருந்து மீண்டும் களத் திற்குத் திரும்ப இந்திய மல்யுத்த நட்சத்திரம் வினேஷ் போகத் பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறார். ஆனால் பாஜக தலைவர்களின் கட்டுப் பாட்டில் உள்ள இந்திய மல்யுத்த சம்மேளனம் புதிய விதிகள் (போட்டி கள் பங்கேற்பு விகிதம்), தாய்மை, பாரீஸ் ஒலிம்பிக் பிரச்சனை (100 கிராம் எடையால் தகுதி நீக்கம்) உள்ளிட்ட வைகளை குறிப்பிட்டு வினேஷ் போகத் ஆசிய விளையாட்டு தகுதிச் சுற்றில் பங்கேற்க தடை விதித்து, தொட ர்ந்து நெருக்கடி அளித்து வருகிறது. இதனை எதிர்த்து தில்லி உயர்நீதி ன்றத்தில் வினேஷ் போகத் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், “இந்தியா தாய்மையை கொண்டாடும் நாடு. மல்யுத்த சம்மேளனம் வீராங்கனை களிடம் பழி வாங்கும் உணர்வுடன் செயல்படக் கூடாது. தகுதிச்சுற்று போட்டிகளில் வினேஷ் போகத் பங்கேற் பதை உறுதி செய்ய வேண்டும்” என உத்தரவிட்டது. ஆனால் தில்லி உயர்நீதிமன்றத் தின் உத்தரவை எதிர்த்து, இந்திய மல்யுத்த சம்மேளனம் உச்சநீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு வெள்ளியன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நர சிம்மா, அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது. மல்யுத்த சம்மேள னத்தின் மனுவைத் தள்ளுபடி செய்த துடன், தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் மூலம் வினேஷ் போகத் மீண்டும் சர்வதேசப் போட்டிகளுக்கு திரும்புவதற்கான சிக்கல்கள் நீங்கி யுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.