தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

23 May 2026, 10:35 pm
விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடருக்கு சிக்கல்

டென்னிஸ் வீரர்கள் மாதாந் திரச் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர் கள் அல்ல என்றாலும், அவர்கள் விளை யாடும் ஒரு தொடரின் வெற்றி நிலைக ளை பொறுத்து குறிப்பிட்ட வருவாய் கிடைக்கும். அதாவது மொத்த பரிசுத் தொகையில் ஒரு பகுதி கிடைக்கும். அதனால் கிராண்ட்ஸ்லாம் உள்ளிட்ட பெரும்பாலான தொடர்களில் விளை யாடும் எந்தவொரு வீரர் - வீராங்கனை கள் சாம்பியன் பட்டம் வெல்லவில்லை என்றாலும், போட்டியில் பங்கேற்று வெறுங்கையோடு திரும்ப மாட்டார் கள். ரவுண்ட்ஸ் சுற்றில் வெற்றி பெற் றால் இவ்வளவு தொகை, காலிறுதி, அரையிறுதி சுற்றிற்கு முன்னேறினால் இவ்வளவு தொகை என வீரர் - வீராங்க னைகளுக்கு கண்டிப்பாக வருவாய் அளிக்கப்படும். இந்நிலையில், ஞாயிறன்று தொ டங்கும் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ் லாம் டென்னிஸ் தொடரின் ஒட்டுமொத்த வருவாயில் தற்போது தங்களுக்கு வெறும் 15 சதவீதம் மட்டுமே வழங்கப் படுவதாக முன்னணி வீரர்கள் (டாப் 10) குற்றம்சாட்டி, போராட்டத்தில் இறங் கப்போவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்க டென்னிஸ் வீர ரான டெய்லர் பிரிட்ஸ் (டாப் 8) கூறுகை யில்,“பிரெஞ்சு ஓபனில் திட்டமிட்ட போ ராட்டம் நடத்தப்படுவது உறுதி. இந்த போராட்டம் மரியாதைக்கானது. இது கூடுதல் பணம் வேண்டும் என்பதற்கான போராட்டம் அல்ல. நியாயமானதை மட்டுமே நாங்கள் கேட்கிறோம். அவ்வ ளவு தான்” என அவர் கூறினார். தொடர்ந்து டென்னிஸ் உலகின் முதல்நிலை வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர்,“வீரர்கள் மீது ஏற்பாட் டாளர்கள் அதிக மரியாதை காட்ட வேண்டும். நாங்கள் இல்லாமல் (டாப் 10) இந்த போட்டிகளை நடத்துவது சாத்தியமில்லை என்பதால், இந்த போராட்டம் ஒரு நல்ல முயற்சி என்று நான் நினைக்கிறேன். இது மரியாதை பற்றியது. ஒரு சிறிய பதிலுக்காக கூட நாங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டியுள்ளது. முதல் 10 சிறந்த வீரர்களை இப்படி நடத்து வது நல்லதல்ல” என அவர் கண்ட னம் தெரிவித்துள்ளார். வீரர்களின் வரு வாய் உள்ளிட்ட பிரச்சனையால் களி மண் தரையில் நடைபெறும் ஒரே கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொட ருக்கு பெரும் சிக்கல் முளைத்துள்ளது.

டிராவிஸ் ஹெட் உடன் கைகுலுக்க மறுத்த விராட் கோலி ரசிகர்கள் கடும் கண்டனம்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் வெள்ளி யன்று ஐபிஎல் தொடரின் 67ஆவது லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் - பெங்க ளூரு அணிகள் விளையாடின. முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 255 ரன்கள் குவித்தது. 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 200 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்துக்கு பிறகு இரு அணியின் வீரர்க ளும் வழக்கத்தின்படி கைகுலுக்கிக் கொண்டனர். ஆனால் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா) உடன் பெங்களூரு வீரர் கோலி (இந்திய அணியின் முன்னாள் வீரர்) கைகுலுக்க மறுத்துவிட்டார். கிரிக்கெட், கபடி உள்ளிட்ட பெரும்பாலான விளை யாட்டுகளில் சாம்பியன் பட்டத்தை விட கைகுலுக்குதல் மிக முக்கியமானது ஆகும். இதனால் இந்நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோலி மீது தான் தவறு பெங்களூரு பேட்டிங் இன்னிங்ஸின் போது கோலி யை ஆட்டமிழக்க பந்துவீச்சாளர்களுக்கு ஹெட் திட்டம் போட்டு கொடுத்தார். வியூகம் தானே போட்டியின் அடிப் படை. ஆனால் கோலி அடுத்த பந்திலேயே ஒரு பவுண்ட ரியை விளாசி,”நீயும் வேணும்னா வந்து சில ஓவர்களை வீசிப் பாரேன்!” என்று ஹெட்டைப் பார்த்து சைகை காட்டினார். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் ஹெட் அமைதியாக இருந்தார். அடுத்த சில நிமிடங்களில் கோலி 11 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். கோலி அவுட்டாகி வெளியே றும்போது ஹெட்,”நான் பந்துவீச வருவதற்கு முன்பே நீ அவுட்டாகிட்டியே” என்று பதிலுக்கு வம்பு செய்தார். இந்த மோதலால் தான் ஹெட் உடன் கோலி கைகுலுக்க மறுத் துள்ளார். ஆனால் ஹெட் கைகுலுக்க கை நீட்டினார். ஆனால் வயதில் அனுபவத்தில் மூத்த வீரரான கோலி புறக்கணித்தது பெரும் சர்ச்சையையும், கண்டனத்தையும் கிளப்பியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.