விளையாட்டு
25 May 2026, 10:24 pm

விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச் அபாரம்

களிமண் தரையில் நடை பெறும் ஒரே கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் 96ஆவது சீசன் ஞாயிறன்று தொடங்கியது. திங்களன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தரவரிசையில் இல்லாத பிரான்சின் பெர்ரிகார்டை எதிர்கொண்டார். தொடக்கத்தில் நன்றாக விளையாடிய பெர்ரிகார்ட் முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார். எனினும் 2ஆவது செட் முதல் சுதாரித்து விளையாடிய ஜோகோவிச் கடைசி 3 செட்களையும் கைப்பற்றி, 5-7, 7-5, 6-1, 6-4 என்றசெட் கணக்கில் அபார வெற்றி பெற்று, 2ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார். சம்சோனோவா அதிர்ச்சி மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 20ஆவது இடத்தில் உள்ள முன்னணி வீராங்கனையான ரஷ்யாவின் சம்சோ னோவா, சுவிட்சர்லாந்தின் ஜில் டேய்ச்மானை எதிர்கொண்டார். யாரும் எதிர்ப்பாராத சூழலில், அதிரடியாக விளையாடிய சுவிட்சர்லாந்தின் ஜில் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று, 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார். அதே போல பவோலினி (இத்தாலி), கிறிஸ்டியா (ருமேனியா) ஆகிய முன்னணி வீராங்கனைகளும் 2ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

உலகக்கோப்பை கால்பந்து தொலைக்காட்சி, விளம்பர நிறுவனங்களுக்கு வேட்டு வைத்த ஏஐ

அடுத்த மாதம் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் கூட்டாக 23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்துத் தொடர் தொடங்க உள்ளது. பொதுவாக கால்பந்து உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக தொலைக்காட்சி, விளம்பர நிறுவனங் கள் சிறப்பு பாடல்கள் மூலம் தங்களது இருப்பை வெளிகாட்டும். அதாவது ஒரு குட்டித் திரைப்படம் ஆக அந்த வீடியோ அடங்கிய பாடல்கள் ஜொலிக்கும். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் கால்பந்து ரசிகர்கள் தங்களது நாடுகளுக்கு ஆதரவாக பாடல்களை சொந்தமாக உருவாக்கி வருகின்றனர். இந்த கால்பந்து வாழ்த்துப் பாடல்கள் யூடியூப், டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான பார்வைகளைக் குவித்து வருகின்றன. அதே வேளையில், இந்த வைரல் பாடல்களின் உரிமையாளர் யார், கலைஞர்களுக்கான ஊதியம் மற்றும் மனித படைப்பாற்றலுக்கான மதிப்பு ஆகியவை குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பும் சூழ்நிலையில், தொலைக்காட்சி, விளம்பர நிறுவனங்களுக்கு இது பெரும் சிக்கலை ஏற்படுத்துவதாக அமையும் என ஒளிபரப்பு வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காரணம் உலகக்கோப்பை கால்பந்து சீசனின் போது தொலைக் காட்சி, விளம்பர நிறுவனங்கள் பல லட்சம் செலவு செய்து, வீரர்களை நடிக்க வைத்து பாடல்களை உரு வாக்குவார்கள். ஆனால் இது கோடிக் கணக்கில் வருமானம் தரும். இதனால் உலகக்கோப்பை கால்பந்து சீசனில் தொலைக்காட்சி, விளம்பர நிறு வனங்கள் பண மரத்தில் குளிக்காயும் என்று சொல்வார்கள். ஆனால் தற்போதைய சூழலில் எல்லாம் மாறி, தினமும் நூற்றுக்கணக்கில் ஏஐ பாடல்களை ரசிகர்கள் வெளியிட்டு வருவதால், தொலைக்காட்சி, விளம்பர நிறுவனங்கள் தங்கள் வழக்கமான வருமானம் பற்றி, கவலை தெரிவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.