சுதந்திரப் போராட்ட தியாகி விஸ்வநாததாஸ் பிறந்தநாள் விழா
16 Jun 2026, 9:30 pm

சுதந்திரப் போராட்ட தியாகி விஸ்வநாததாஸ் பிறந்தநாள் விழா

தூத்துக்குடி, ஜூன் 16- சுதந்திரப் போராட்ட தியாகி எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் பிறந்தநாள் விழா பல்வேறு ஊர்களில் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், பிரையண்ட்நகர் 7 ஆவது தெருவில் நடைபெற்ற நிகழ்வில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் சிஐடியு மருத்துவர்-முடிதிருத்துவோர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ். நாகராஜ், சிஐடியு மாநிலச் செயலாளர் ஆர்.ரசல், சிபிஎம் மாநகரச் செயலாளர் எம். எஸ்.முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவில்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் சிஐடியு முடிதிருத்துவோர் நலச் சங்கத்தின் சார்பில் சுதந்திரப் போராட்ட தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த தின விழா கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதில் முடி திருத்துவோர் நலச் சங்க தலைவர் டி.மாடசாமி, துணைத் தலைவர் ஆறுமுகசாமி, செயலாளர் வேல்முருகன், துணைச் செயலாளர் முத்துச்செல்வன், பொருளாளர் எம்.எஸ்.முருகன்,சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோக்ராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.