தனியார் பேருந்துகளில் இலவச பயணம்? அமைச்சர் பேட்டி
10 Oct 2026, 3:04 am

தனியார் பேருந்துகளில் இலவச பயணம்? அமைச்சர் பேட்டி

சேலம், அக்.9-தனியார் பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய்தமிழன் ஏ.பார்த்திபன் செய்தியாளர்களிடம் வெள்ளியன்று தெரிவித்தார்.

சேலம் நகரப் பேருந்து நிலையத்தில், பழையபேருந்துகளுக்குப் பதிலாகப் புதிதாக வாங்கப்பட்ட 28 ‘பிஎஸ்-6’ (BS-6) வகையைச் சேர்ந்த நகரப்பேருந்துகளின் இயக்கத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் ஏ.பார்த்திபன் பொதுமக்களின்பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: அரசுப்பேருந்துகளின் கதவுகளில் உள்ள சென்சார் பிரச்சனைகள் கண்டறியப்பட்டுத் தொடர்ச்சியாக சரிசெய்யப்பட்டு வருகின்றன. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாகப் பேருந்தில் ஏறிய பிறகே கதவுகள் மூடப்படுவதை நடத்துநர்களும் ஓட்டுநர்களும் உறுதி செய்ய வேண்டும். அரசுப்பேருந்துகளில் இலவச பயணத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதை தொடர்ந்து, தனியார் பேருந்து உரிமையாளர்களும் தங்களது பேருந்துகளில் இத்திட்டத்தை செயல்படுத்த விருப்பம் தெரிவித்துமுதலமைச்சை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். இதுகுறித்து உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

தொலைதூர பேருந்து வழித்தடங்களில் செயல்படும் உணவகங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேவேளையில், தமிழக அரசின் சார்பில் புதிய உணவகங்கள் அமைப்பது குறித்தும் தீவிரமாகபரிசீலிக்கப்பட்டு வருகிறது. விரைவு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் முன்னதாக நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகள் குறித்து ஆய்வு செய்து, மீண்டும் பழைய நடைமுறைப்படி அனைத்து ஊர்களுக்கும் பேருந்துகள் இயங்க தேவையான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும், என்றார்.