இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!
22 Dec 2025, 2:53 pm
<p><strong>இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!</strong></p>
<p>புதுதில்லி, டிச. 22 - இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறைவடைந் திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், ‘‘இந்தியா - நியூசிலாந்து உறவில், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முத லீட்டில் இது ஒரு முக்கிய தருணம். இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் முடி வடைந்ததை அடுத்து, எனது நண்பர் (நியூசிலாந்து) பிரதமர் கிறிஸ் டோபர் லக்சனும் நானும் சிறிது நேரத்துக்கு முன்பு மிகச் சிறந்த உரையாடலை மேற்கொண்டோம். இருதரப்பு தடையற்ற வர்த்தக பேச்சு வார்த்தை தொடங்கி ஒன்பது மாதங் களில் முடிவடைந்திருப்பது ஒரு வர லாற்று மைல்கல்!” என்று குறிப் பிட்டுள்ளார். ஒப்பந்தத்தின்படி நியூசிலாந்து அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியா வில் சுமார் 1.79 லட்சம் கோடியை முதலீடு செய்யும் என்றும், இதன் காரணமாக இனி வரும் நாட்களில் நியூசிலாந்து நாட்டின் பொருட்கள் இந்தியாவில் பரவலாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. மொரீஷியஸ், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்க நாடுகள் (EFTA countries), இங்கிலாந்து, ஓமன் ஆகிய நாடுகளுடன் ஏற் கெனவே தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா மேற் கொண்டுள்ள நிலையில், இந்த பட்டியலில் தற்போது நியூசிலாந்தும் இணைந்துள்ளது.</p>
