தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

4 Dec 2025, 3:52 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

மூலக்கூறு இனப்பெருக்கப் பயிற்சி

கோவை, டிச.4- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மூலக் கூறு இனப்பெருக்கப் பயிற்சி துவங்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உயிரித் தொழில்நுட்பத் துறை & தாவர மூலக்கூறு உயிரியல் மையத்தில் (CPMB&B) “பயிர் மேம்பாட்டுக்கான மூலக்கூறு  இனப்பெருக்கம்” என்ற இரண்டு நாள் செய்முறைப் பயிற்சி புதனன்று துவங்கியது. தமிழ்நாடு, கேரளம், தில்லி மாநிலங்க ளைச் சேர்ந்த 26 முதுநிலை மாணவர்கள், ஆராய்ச்சியா ளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை மைய இயக்குநர் டாக்டர் என். செந்தில் தொடங்கி வைத்தார். உயிரித் தொழில்நுட்பத் துறைத் தலைவர் ஈ.கோகிலதேவி வர வேற்றார். பயிற்சியில் மூலக்கூறு குறியீடுகள், பிசிஆர், மார்க்கர் உதவி இனப்பெருக்கம் (MAS) ஆகியவற்றில் கோட் பாடு, நேரடி செய்முறை அனுபவம் வழங்கப்படுகிறது.

ஒன்றிய அரசின் திறன் மேம்பாட்டு இலவச பயிற்சி, உடனடி வேலைவாய்ப்பு!

கோவை, டிச.4- ஒன்றிய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் (MNRE) கீழ், வேலைவாய்ப்புடன் கூடிய ‘சூர்யமித்ரா’ திறன் மேம்பாட்டுப் பயிற்சி கோவையில் வரும் டிச.8 ஆம்தேதி துவங்குகிறது. நாடு முழுவதும் அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் மெகா வாட் மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலி ருந்து பெற ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த  இலக்கை அடைய, அடுத்த 5 ஆண்டுகளில் மட்டும் 10 லட் சத்திற்கும் மேற்பட்ட சூரிய ஒளி தொழில்நுட்ப உதவியாளர் கள் தேவைப்படுகிறார்கள். இந்தத் தேவையை நிறைவேற் றும் வகையில், ஒன்றிய அரசு சூர்யமித்ரா திட்டத்தின் கீழ் 3  மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சியை வழங்கி வருகிறது. கோவை, வடவள்ளியில் செயல்பட்டு வரும் நேர்டு (NERD) தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் சௌ. காமராஜ் இது குறித்துப் பேசுகையில், “ஒன்றிய அர சின் அங்கீகாரத்துடன் வழங்கப்படும் இந்த 3 மாத இலவச தொழில்நுட்பப் பயிற்சியை நேர்டு தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறது. இதில், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் படித்தவர்களுக்குப் பயிற்சி, தங்கு மிடம், மற்றும் உணவு வசதி ஆகியவை எந்தவித கட்டணமும்  இன்றி இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியை வெற்றிக ரமாக முடிப்பவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, உட னடி வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது. பயிற்சி சான்றிதழின் மூலம் சொந்தமாகச் சூரிய ஒளி மின்சார நிறுவனங்கள் அமைத்துத் தரும் தொழிலையும் மேற்கொள்ளலாம். சூரிய மின்சக்தி உற்பத்தியை ஊக்குவிக் கும் வகையில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மானியம் வழங்குகின்றன. ஒரு கிலோ வாட்ஸ் சூரிய மின் உற்பத்தி  அமைப்புக்கு ரூ.30,000 மானியமும், இரண்டு கிலோ வாட்ஸ்  அமைப்புக்கு ரூ.60,000 மானியமும் பயனாளிக்கு கிடைக் கிறது. இதுவரை 6 கட்டங்களாக 20 பயிற்சிகள் முடிவடைந் துள்ளன. இதன் மூலம் 450 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ள னர். ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் டிப்ளமோ அல்லது பொறியியல் படித்த தகுதியுள்ள மாணவர்கள் இந்த இலவச தொழில் நுட்பப் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம். முதல் இரண்டு  மாதங்கள் வடவள்ளி நேர்டு வளாகத்தில் வகுப்புப் பயிற்சி யும், கடைசி ஒரு மாதம் சூரிய மின் உற்பத்தி நிறுவனங்க ளில் செயல்முறை பயிற்சியும் வழங்கப்படும். விண்ணப் பிக்க தேவையான ஆவணங்கள்: ஆதார் நகல், கல்விச் சான்றி தழ் நகல் (ஐ.டி.ஐ/டிப்ளமோ/பொறியியல்), பாஸ்போர்ட் அளவு புகைப்படம் வேண்டும். தொடர்புக்கு, வாட்ஸ்அப் எண்: 6382555272 அல்லது 9171119118 மின்னஞ்சல்: nerdsocietycoimbatore@gmail.com விரைந்து விண்ணப் பித்து, ஒன்றிய அரசின் இலவச வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் பங்கேற்றுப் பயன்பெறு மாறு பேராசிரியர் காமராஜ் கேட்டுக் கொண்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.