இலவச சிலம்பம் பயிற்சி துவக்கம்
21 Jun 2026, 2:26 am
<p><strong>இலவச சிலம்பம் பயிற்சி துவக்கம்</strong></p><p>உடுமலை, ஜூன் 20- உடுமலையிலுள்ள உண்டு உறைவிட பள்ளி மாணவர்க ளுக்கு, இலவச சிலம்பம் பயிற்சி துவங்கியது. திருப்பூர் மாவட்டம், உடுமலையில் மகாத்மா காந்தி உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் மலை வாழ் கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை, தங்கி படித்து வருகின்றனர். இவர்களுக்கு தன்னம்பிக்கை வளர்க்கவும், கல்வி முன்னேற்றத்திற்காகவும் உடுமலை பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் அறக் கட்டளை சார்பில், கடந்த 9 ஆண்டுகளாக இலவச சிலம்பம், களரி பயிற்சிகளை உடுமலை கிளை நூலக வாசகர் வட்டத் தின் சார்பில் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. தற்போது 10 ஆம் ஆண்டாக நடப்பு கல்வியாண்டில் பயிலும் மாணவர்க ளுக்கான இலவச சிலம்ப பயிற்சி துவக்க விழா வெள்ளி யன்று நடைபெற்றது. இந்த ஆண்டில் புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் 40 பேருக்கு சிலம்ப அடிப்படை பயிற்சி துவக்கப்பட்டது. பகத்சிங் சிலம்பம் மார்ஷியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை ஆசான் வீரமணி, பயிற்சிகளை வழங்கினார். நூலகர் வாசகர் வட்ட ஆலோசகர் அய்யப்பன், பள்ளி காப்பா ளர் புருஷோத்தமன், பணி நிறைவு நூலகர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
