முந்தய பக்கம்

பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட  இலவச தையல் இயந்திரம்

27 Feb 2026, 5:32 pm
பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட  இலவச தையல் இயந்திரம்
<p><strong>பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட &nbsp;இலவச தையல் இயந்திரம்</strong></p> <p>திருவண்ணாமலை, பிப்.27- திருவண்ணாமலை மாவட்டத்தில் சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் மூலம் கைம்பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், பொருளாதாரத்தில் நலிந்த பெண்கள், மற்றும் தையல் தொழில் தெரிந்த பெண்க ளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. &nbsp;அந்த வகையில் தமிழ்நாடு தையல் கலை தொழிலாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழுவின் சார்பில், வந்தவாசி மற்றும் தண்ட ராம்பட்டு வட்டம் வாணாபுரம் பகுதிக்கு உட்பட்ட பெண்க ளுக்கு இலவசமாக தையல் இயந்திரங்களை மாவட்ட சமூக நலத்துறை மூலம் பெற்றுத் தரப்பட்டது. இந்த நிகழ்வில், சமூக நல விரிவாக்க நல அலுவலர் ஜீவா, தையல் கலை தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி ஜீனத், தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கி ணைப்பாளர் எஸ்.ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram