முந்தய பக்கம்

ஹிப் ஹாப் தமிழா இசை நிகழ்ச்சி நுழைவுசீட்டு வைத்திருப்பவர்களுக்க மெட்ரோவில் இலவச பயணம்

6 Mar 2026, 3:17 pm
ஹிப் ஹாப் தமிழா இசை நிகழ்ச்சி நுழைவுசீட்டு வைத்திருப்பவர்களுக்க மெட்ரோவில் இலவச பயணம்
<p><strong>ஹிப் ஹாப் தமிழா இசை நிகழ்ச்சி நுழைவுசீட்டு வைத்திருப்பவர்களுக்க மெட்ரோவில் இலவச பயணம்</strong></p> <p>சென்னை, மார்ச் 6- சென்னையில் சனிக்கிழமையன்று &nbsp;நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ள ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு, ரசிகர்களுக்கு இலவச மெட்ரோ பயண வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக &lsquo;Torque Entertainment LLP&rsquo; நிறுவனத்துடன் இணைந்துள்ள மெட்ரோ நிர்வாகம், இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டையே பயணச் சீட்டாகவும் பயன்படுத்த அனுமதித்துள்ளது. ரசிகர்கள் தங்களின் நுழைவுச் சீட்டில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து, சென்னையின் எந்தவொரு நிலையத்திலிருந்தும் நந்தனம் நிலையத்திற்கு ஒருமுறை சென்று வர இலவசமாகப் பயணிக்கலாம். நள்ளிரவு வரை நிகழ்ச்சி நடைபெறுவதால், நந்தனம் நிலையத்திலிருந்து விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் நோக்கிச் செல்லும் கடைசி ரயில்கள் நள்ளிரவு 12 மணிக்கு புறப்படும் வகையில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்க ரசிகர்கள் கடைசி ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாக நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram