தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

13 Feb 2026, 5:58 pm
சென்னை விரைவு செய்திகள்

ரூ.3,510 கோடி முதலீட்டில் கேஎல்ஏ இந்தியா ஆராய்ச்சி மையம்

சென்னை, பிப்.13 - அமெரிக்காவின் கேஎல்ஏ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துணை நிறுவனமான கேஎல்ஏ இந்தியா லிமிடெட், சென்னையில் 3,510 கோடி ரூபாய் முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம் அமைக்க வெள்ளிக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. 12 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமையவுள்ள இந்த வளாகத்தில், உயர் செயல்திறன், கணினி தொழில்நுட்பம், செயல்முறை கட்டுப்பாடு, பொறியியல் மென்பொருள் போன்ற துறைகளில் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க பணிகள் மேற்கொள்ளப்படும். அடுத்த பத்து ஆண்டுகளில் சுமார் 4 ஆயிரம் உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. செமிகண்டக்டர் துறைக்கான தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் உலகளாவிய முன்னணி நிறுவனமான கேஎல்ஏ கார்ப்பரேஷன், சிப் உற்பத்தியில் பயன்படும் ஆய்வு, அளவீடு மற்றும் தரவு பகுப்பாய்வு அமைப்புகளை உருவாக்குகிறது. உலகம் முழுவதும் உள்ள முன்னணி சிப் உற்பத்தியாளர்களுக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சேவைகளை வழங்கி, புதிய தலைமுறை செமிகண்டக்டர் வளர்ச்சியில் இந்நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்துவதற்கான இலக்கை அடைய, அரசு பல்வேறு முற்போக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. செமிகண்டக்டர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயிர் அறிவியல், புத்தொழில், புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய திறன் மையங்கள் போன்ற வளர்ந்துவரும் துறைகளில் அதிக முதலீடுகளை தமிழ்நாடு அரசு ஈர்த்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமை செயலாளர் நா.முருகானந்தம், அரசு உயர் அதிகாரிகள், கேஎல்ஏ நிறுவனத்தின் அதிகாரிகள் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இளைஞர்களுக்குத் தாட்கோ மூலம்  3 மாதகால திறன் பயிற்சி

திருவள்ளூர், பிப்.13- திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளை ஞர்களுக்குத் தாட்கோ மூலம் சென்னையில் தங்கிப் பயிலும் வகையில் 3 மாத கால திறன் பயிற்சி கள் வழங்கப்பட உள்ளன. உணவு சேவை, ஆடை வடிவமைப்பு மற்றும் அழகுக்கலை போன்ற இப்பயிற்சிகளுக்கு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, ரூ. 3 லட்சத்திற்குள் ஆண்டு வரு மானம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தங்குமிடம் மற்றும் உணவுச் செலவுகளைத் தாட்கோ ஏற்கும் நிலை யில், பயிற்சியை முடிப்ப வர்களுக்கு வேலை வாய்ப்பும் உறுதி செய்யப்  படும் என மாவட்ட ஆட்சி யர் மு.பிரதாப் தெரி வித்துள்ளார். தகுதி யுள்ள வர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

அமித் ஷா வருகை: டிரோன்கள் பறக்க தடை

காரைக்கால்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையையொட்டி, காரைக்காலில் சனிக்கிழமை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் பறக்க விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் இஷிட்டா ரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரயிலில் அடிபட்டு  2 பெண்கள் உயிரிழப்பு

அம்பத்தூர், பிப். 13-  சென்னை ஜாபர்கான்பேட்டை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி ரேணுகா (55). இவரது உறவினர்கள் அதே பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் மனைவி ஹேமாவதி (36), திருவொற்றியூர் காலடிப்பேட்டை சேர்ந்த சதீஷ் மனைவி நந்தினி (27). இந்த நிலையில் வெள்ளியன்று 3 பேரும் கொரட்டூர் ரயில் நிலையத்திற்கு செல்வதற்காக இருப்புப்பாதையை கடக்க முயன்றனர். அப்போது மங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயில் மோதியதில் சக்கரத்தில் சிக்கி ரேணுகா, ஹேமாவதி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் நந்தினி ரயிலில் அடிபட்டு படுகாயம் அடைந்தார். அங்கிருந்த பொதுமக்கள் நந்தினியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ரயில் வருவதை பார்த்து வாசுதேவன், சுந்தரி , பரிமளா  ஆகிய 3 பேரும் ஒதுங்கி நின்றதால் உயிர் தப்பினர்.  தகவல் அறிந்து பெரம்பூர் இருப்புப்பாதை காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று இறந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு மெட்ரோவில் இலவசப்பயணம்

சென்னை, பிப்.13- சென்னை நேரு வெளிப்புற அரங்கில் சனிக்கிழமையன்று (பிப். 14) நடைபெறவுள்ள “ஏ.ஆர்.ரஹ்மானின் தி வொண்டர்மென்ட் டூர்” இன்னிசை கச்சேரிக்குச் செல்லும் ரசிகர்களுக்குச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மகிழ்ச்சி யான செய்தியை அறிவித்துள்ளது. நாய்ஸ் அண்ட் கிரெய்ன்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ள இந்தத் திட்டத்தின்படி, இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டை வைத்திருப்பவர்கள் சென்னையில் உள்ள எந்தவொரு மெட்ரோ நிலையத்திலிருந்தும் சென்ட்ரல் மெட்ரோ நிலையம் வரை இலவசமாகப் பயணம் செய்யலாம்.  இந்த நுழைவுச் சீட்டில் உள்ள கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து ஒருமுறை சென்று வர  அனுமதி அளிக்கப்படுகிறது. ரசிகர்களின் வசதிக்காகச் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்திலிருந்து விமான நிலையம், விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை செல்லும் கடைசி ரயில்கள் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேருக்கு இடமாற்றம்

சென்னை, பிப்.13- சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் அறிவித்து, கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் மற்றும் மதன் ஆகியோர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விஜயகுமார் திருநெல்வேலி மாநகர துணை காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செமி கண்டக்டர் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை, பிப்.13- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செமி கண்டக்டர் துறையில் முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்காவைச் சேர்ந்த கே.எல்.ஏ.கார்ப்பரேஷன் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.3,000 கோடி முதலீடு செய்து, சென்னையில் செமி கண்டக்டர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைக்க உள்ளது. இந்த மையத்தின் மூலம் சுமார் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்கு

கரூர், பிப்.13-  முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக பிரமுகர் தனபால் ஆகியோர் அரசு அனுமதியின்றி சுமார் 112 யூனிட் ஆற்று மணலை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக போலீசார் வழக்குப் பதிந்து மணலை பறிமுதல் செய்தனர். மணலை பறிமுதல் செய்ய முயன்ற போது அங்கு கூடிய அதிமுகவினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சுமார் இரண்டு மணி நேர தாமதத்திற்குப் பிறகு மணல் பறிமுதல் செய்யப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.