முந்தய பக்கம்

இலவச பொது மருத்துவ முகாம்

31 Oct 2026, 11:21 pm
இலவச பொது மருத்துவ முகாம்
<p><strong>இலவச பொது மருத்துவ முகாம்</strong></p><p>திருவில்லிபுத்தூர், அக்.31-மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்கம் மற்றும் சிவகாசி சுகாதார மாவட்டத்துக்கு உட் பட்ட டி.மானகசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், திருவில்லிபுத்தூர் அருகேபாட்டக்குளம் கிராமத்தில் இலவச பொது மருத் துவ முகாம் நடைபெற்றது.கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற முகாமை, ஆர்.ரெட்டியபட்டி வட்டார மருத் துவ அலுவலர் கவிதா ராணி தொடங்கி வைத்தார்.</p><p>முகாமில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், காசநோய், பொது மருத்துவம், பல், கண், குழந்தைகள் நலம், இதய நோய், கர்ப் பப்பை தொடர்பான பிரச்சனைகள், பிசியோதெரபி, சித்தா, ஹோமியோபதி உள் ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.முகாமுக்கான ஏற்பாடுகளை மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் ரமேஷ், ஜவகர், புஷ்பராஜன், பாலா, ராமநாராயணன், ராஜா மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இரா.சமுத்திரம், சுகாதார ஆய்வாளர்கள், டி.மானகசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராஜேஷ் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram