இடுவாயில் இலவச மருத்துவ முகாம்
15 Mar 2026, 4:11 pm
<p><strong>இடுவாயில் இலவச மருத்துவ முகாம்</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 15– தியாகி ரத்தினசாமியின் நினைவு தினத்தை முன் னிட்டு, நடைபெற்ற மருத்துவ முகாமில் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். தியாகி இடுவாய் ரத்தினசாமியின் நினைவு தினத்தை முன்னிட்டு, இதயம் காப்போம் பேருந்து திட்டம் மூலம் மாபெரும் இலவச இருதய பரி சோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் திருப்பூர் மாவட்டம், இடுவாய் பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளியன்று நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், திருப்பூர் காந்தி நகர் ரோட்டரி சங்கம், ரேவதி மெடிக்கல் சென்டர் அறக்கட்டளை இணைந்து நடத்திய இந்த முகாமை மருத்துவர் சுந்தரமூர்த்தி, ரோட்டரி சங்கத் தலைவர் பாலகணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.கணேசன், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் ஜி.சிந்தன், இணைச்செயலா ளர் பிரவீன் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இம் முகாமில் 150 பேர் கலந்து கலந்து கொண்டு பயன் பெற்றனர்.</p>
<p> </p>
