தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மின் ஊழியர் மத்திய அமைப்பின் இலவச மருத்துவ முகாம்

7 Oct 2026, 10:09 pm
மின் ஊழியர் மத்திய அமைப்பின் இலவச மருத்துவ முகாம்

மின் ஊழியர் மத்திய அமைப்பின் இலவச மருத்துவ முகாம்

திருநெல்வேலி அக். 7-தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் ( சி.ஐ.டி.யு ) திருநெல்வேலி மின் திட்ட 34 வது மாவட்டமாநாடு தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தியாகராஜ் நகர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் இலவச பொது மருத்துவமுகாம் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது, மருத்துவ முகாமிற்கு சங்கத்தின் திட்ட தலைவர் நாகையன் தலைமை தாங்கினார். திட்டச் செயலாளர் கந்தசாமி வரவேற்றார். மின்வாரிய தலைமைப் பொறியாளர் லதா மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். உற்பத்தி வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ். திருநாவுக்கரசு, சிஐடியு மாவட்ட செயலாளர் எல்.சரவணபெருமாள், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் வி.சந்திரன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் பீர்முகம்மது ஷா நிறைவுரையாற்றினார். திட்ட பொருளாளர் இ. பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

தென்காசி

தென்காசி செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் மதுரை அப்பல்லோ மருத்துவமனை குழுமம் மற்றும் வாசன் கண் மருத்துவமனை குழுமம் சார்பில் இலவசமருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை தென்காசி கோட்டசெயற்பொறியாளர் ஸ்ரீவனஜா தொடங்கி வைத்தார்.

முகாமில் பொது மருத்துவப் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 100 மின் பணியாளர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து பயனடைந்தனர்.

இதில் சிஐடியு மாவட்டசெயலாளர் மணிகண்டன், மின் ஊழியர் மத்திய அமைப்ப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பீர்முகமது ஷா, நெல்லை திட்டத் தலைவர் நாகையன், தென்காசிமாவட்ட ஒருங்கிணைப்பாளர் பட்டமுத்து, தென்காசிகோட்ட செயலாளர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.