செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனையின் இலவச மருத்துவ முகாம்
21 Feb 2026, 4:39 pm
<p><strong>செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனையின் இலவச மருத்துவ முகாம்</strong></p>
<p>கிருஷ்ணகிரி, பிப். 21- ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் இலவச மருத்துவ முகாம் மூக்கண்டப்பள்ளியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நேதாஜி நகர் பகுதி 18-வது வார்டு கவுன்சிலர் சசிதேவ் தலைமையில் நடை பெற்றது. முகாமில் கண், எலும்பு, பொது மருத்துவம் சார்ந்த மருத்துவர்கள் கிருஷ்மா, ரிஷி, இனியன், பிரசாந்த், மக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ், உதவியாளர்கள் ரமேஷ், நாகேஷ், சமூக ஆர்வலர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். 250-க்கும் மேற்பட்டவர்கள் பரி சோதிக்கப்பட்டனர். அதில் 50 பேர் இலவச மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.</p>
