மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி
13 Feb 2026, 5:58 pm
<p><strong>மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி</strong></p>
<p>புதுச்சேரி, பிப். 13- புதுச்சேரி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்றவர்களுக்கும், 2025-26 ஆம் கல்வியாண்டில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினிகள் வழங்கும் விழா புதுச்சேரி ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளியன்று நடைபெற்றது. விழாவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு, துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் முன்னிலையில் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். விழாவில் பேரவைத் தலைவர் செல்வம், கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கல்வித் துறை அதிகாரிகள் உள்ளிட்ட திரளான மாணவர்கள் பங்கேற்றனர்.</p>
<p> </p>
