42 பயனாளிகளுக்கு இலவச மனை பட்டா வழங்கல்
1 Jan 2026, 4:52 pm
<p><strong>42 பயனாளிகளுக்கு இலவச மனை பட்டா வழங்கல்</strong></p>
<p>திருத்துறைப்பூண்டி, ஜன.1 - திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டம், உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தெற்கு பள்ளியமேடு கிராமத்தைச் சேர்ந்த 42 பயனா ளிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அரசு இலவச வீட்டு மனை பட்டாவினை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன், நாகப் பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து ஆகியோர் வழங்கினர். அதனைத் தொடர்ந்து முத்துப்பேட்டை ஒன்றியம் ஆலங்காடு ஊராட்சி அருகில் வட்டார நாற்றங்கால் அமைக்கப்பட்டு வரு வதை திருவாரூர் மாவட்ட ஆட்சியர், நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் முத்துப் பேட்டை வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் வெற்றியழகன், விஜயலட்சுமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
