பாபநாசத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி
15 Dec 2025, 5:05 pm
<p><strong>பாபநாசத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி</strong></p>
<p>பாபநாசம், டிச.15- தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை மதகடி பஜார் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே, நடந்து வரும் பாலம் கட்டும் பணிக்கு, இடையூறாக குடியிருந்து வந்த 6 பேருக்கும், பசுபதிகோவிலில் சாலை புறம்போக்கில் குடியிருந்து வந்த 9 பேருக்கும் என மொத்தம் 15 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி பாபநாசத்தில் நடைபெற்றது. இதில், கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் பங்கேற்று, இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினார். பாபநாசம் தாசில்தார் பழனிவேல், பேரூராட்சி தலைவர்கள் பாபநாசம் பூங்குழலி, அய்யம்பேட்டை புனிதவதி, திமுக பேரூர் செயலாளர்‌ கபிலன், பேரூராட்சி கவுன்சிலர்கள், அய்யம்பேட்டை பேரூராட்சி துணைத் தலைவர் அழகேசன், பாவை அனிபா உட்பட பலர் பங்கேற்றனர்.</p>
