திருவில்லிபுத்தூரில் இலவச கண் சிகிச்சை முகாம்
20 Jan 2026, 2:46 pm
<p><strong>திருவில்லிபுத்தூரில் இலவச கண் சிகிச்சை முகாம்</strong></p>
<p>திருவில்லிபுத்தூர், ஜன.20- சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, திருவில்லி புத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் ஷாகில் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கலந்து, வந்த அனைவருக்கும் கண் பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் கண் குறைபாடு உள்ள 20 பேரை மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்துவிட்டு, அவர்கள் சங்கரா கண் மருத்துவமனையில் மேல்நிலை சிகிச்சைக் காக அனுப்பப்பட்டனர். நிகழ்ச்சிக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் தலைமை தாங்கினார். முகாமில் ஓட்டுநர் உரிமம் புதுப் பிக்க வந்தோர், வாகன ஓட்டுநர்கள் தகுதி சான்று பெற வந்தோர், கனரக ஓட்டுநர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரி மையாளர்கள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சங்கரா கண் மருத்துவமனையில் முகாம் ஒருங்கிணைப்பாளர் செந்தில் முகாமை ஒருங்கிணைத் தார்.</p>
