முந்தய பக்கம்

இலவச கண் பரிசோதனை முகாம்

7 Aug 2026, 11:40 pm
இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்

இராஜபாளையம், ஆக.7-விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

பள்ளிகளின் தாளாளர் எம்.பி. சந்திரன் தலைமை வகித்தார். மெட்ரிகுலேசன் முதல்வர் எஸ். கோபாலகிருஷ்ணன், ஜூனியர் பள்ளியின் முதல்வர் ஜெயபவானி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜபாளையம் ரோட்டரி கிளப் ஆப் கிங் சிட்டி அமைப்பினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். சக்தி கண் மருத்துவமனை டாக்டர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் 685 பேருக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram