இலவச கண் பரிசோதனை முகாம்
19 Jan 2026, 2:23 pm
<p><strong>இலவச கண் பரிசோதனை முகாம்</strong></p>
<p>கோவை, ஜன.19- சாலைப் பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு, வாசன் கண் மருத்துவமனைகளில் இலவச கண் பரிசோ தனை முகாம் நடைபெற்றது. இந்தியா முழுவதும் வாசன் கண் மருத்துவமனை யில் சாலைப் பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு ஓட்டு நர்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்ஒரு பகுதியாக கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைந் துள்ள வாசன் கண் மருத்துவமனை கிளையில் இலவச கண் பரிசோதனை நடைபெற்றது. இதில், தலைமை மருத்துவ அதிகாரிஅனுஷா வெங்கட்ராமன், கண் புரை அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர். ஜெய மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோன்று சேலம் மாவட்டம், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வாசன் கண் மருத்துவமனை யில் ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை திங்க ளன்று நடைபெற்றது. இதில், சேலம் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கோகிலா, போக்குவரத்து காவல் ஆய்வாளர் கே.கிட்டு ஆகியோர் பங்கேற்று பேசினர். வாசன் கண் மருத்துவமனையின் மருத்து வர்கள் செல்வகுமாரி உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் பங்கேற்றனர். இந்த இலவச கண் பரிசோதனை இந் தியா முழுவதும் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடை பெறும் என தெரிவிக்கப்பட்டது.</p>
