மயிலாப்பூரில் இலவச கண் பரிசோதனை முகாம்
1 Jul 2026, 11:38 pm
<p><strong>மயிலாப்பூரில் இலவச கண் பரிசோதனை முகாம்</strong></p><p>முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூர் தொகுதி, தேனாம்பேட்டை, வார்டு 123-ல் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப. வெங்கடரமணன் தொடங்கி வைத்தார்.டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த முகாமில், சிபிஎம் கவுன்சிலர் சரஸ்வதி, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் , பெற்றோர்கள் கலந்துகொண்டு தங்களது கண் பார்வையைப் பரிசோதித்துக் கொண்டனர்.</p>
