மாலை நேர இலவச வகுப்புகள் துவக்கம்
19 Jun 2026, 12:11 am
<p><strong>மாலை நேர இலவச வகுப்புகள் துவக்கம்</strong></p><p>திருப்பூர், ஜூன் 18- திருப்பூர் ஓடக்காடு பகுதி யில் தோழர் கே.தங்கவேல் நினைவகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாலை நேர வகுப்பு துவக்கப்பட்டுள்ளது. இந்த இலவச வகுப்பு துவக்க நிகழ்வை மூத்த தோழர் டி.கே.துரைசாமி வாலிபர் சங்க ஏற்றி வைத்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் முன்னாள் கிளைத் தலைவர் எம்.தியாக ராஜன் தலைமை ஏற்றார்.வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் க.நிரூபன் சக்கரவர்த்தி துவக்க உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், வாலிபர் சங்க வடக்கு மாநகரச் செயலாளர் நவீன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முதல் நாள் வகுப்பில் இந்த பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். தினமும் மாலை 6:00 மணி முதல் 7.30 மணி வரை வகுப்பு நடை பெறும் என்று கிளை நிர்வாகிகள் தெரிவித்த னர். வகுப்பு துவக்கப்பட்ட இரண்டு நாட்க ளில் 40 மாணவர்கள் மாலை நேர வகுப்பில் பங்கேற்றனர்.</p>
