தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

28 Dec 2025, 5:05 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

கலை இலக்கியப் போட்டிகள்

உடுமலை, டிச.28- உடுமலையில் நடைபெற்ற கலை இலக்கியப் போட்டிகளில் பலர் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் ஞாயிறன்று கலை இலக்கியப் போட்டிகள் நடைபெற்றன. பேச்சு, கட்டுரை, ஓவியம்,  திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற போட்டிகள் நடை பெற்றன. இதில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்னடர். உடுமலை வரலாற்று ஆய்வு நடு வத்தின் சார்பில் இப்போட்டிகளுக்கான ஏற்பாடு செய் யப்பட்டது.

மலேசியா எம்.பி., கோவை வருகை

கோவை, டிச.28- தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற் காக மலேசியா நாட்டைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் தத்தோ ஸ்ரீசரவணன் ஞாயி றன்று கோவைக்கு வந்தார். கோவையில் நடைபெறும் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மலேசியா  நாடாளுமன்ற உறுப்பினர் தத்தோ ஸ்ரீசர வணன் ஞாயிறன்று விமானம் மூலம் கோவை  வந்தடைந்தார். அதன்பின் அவர் செய்தியா ளர்களிடம், இந்தியா மற்றும் மலேசியா இடை யேயான தொழில் முதலீடுகள் குறித்த கேள்விக்கு, இந்தியா - மலேசியா இடையே  நீண்டகாலமாகவே ஆழமான வர்த்தகத் தொடர்பு இருந்து வருகிறது. இரு நாடுகளி லும் அதிகப்படியான முதலீட்டு நிறுவனங்கள்  செயல்பட்டு வருகின்றன. இருவழிப்பாதை யிலான இந்த வர்த்தக உறவு வரும் காலங் களிலும் மேலும் வலுவடையும், என்றார்.

மொரப்பூரில் விரைவு ரயில் நின்று செல்லும் என அறிவிப்பு: பயணிகள் மகிழ்ச்சி'

தருமபுரி, டிச.28- திருவனந்தபுரம் விரைவு ரயில் ஜன.1 முதல் மொரப்பூர் ரயில் நிலையத்தில் நின்று  செல்லும் என்ற அறிவிப்பால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர். சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம், திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் செல் லும் அதிவேக தினசரி விரைவு ரயில்கள்  சோதனை அடிப்படையில் தருமபுரி மாவட் டம், மொரப்பூர் ரயில் நிலையத்தில் ஆங்கில  புத்தாண்டு முதல் நின்றுசெல்லும் என தெற்கு  ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. அதன் படி, சென்னை சென்ட்ரலில் இருந்து புறப் பட்டு திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயில் (வண்டி எண்: 12695) ஜன.1 ஆம் தேதி முதல் நாள்தோறும் மொரப்பூர் ரயில் நிலை யத்துக்கு இரவு 7.04 மணிக்கு வந்தடையும். இதேபோல, திருவனந்தபுரத்திலிருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் விரைவுரயில் (வண்டி எண்: 12696), மொரப்பூா் ரயில்  நிலையத்துக்கு நாள்தோறும் விடியற்காலை  5.29க்கு வந்தடையும். எனவே, பொதுமக்கள்  இந்த ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி நாடாளுமன்ற ஆ. மணி கூறுகையில், மொரப்பூர் ரயில் நிலையத் தின் வழியாக செல்லும் ஆறு ரயில்கள் மொரப் பூர், பொம்மிடி ரயில் நிறுத்தத்தில் நின்று செல்ல வலியுறுத்தி, ஒன்றிய அமைச்சர் அஸ் வின் வைஸ்ணவை கடந்த டிச.3 ஆம் தேதி  சந்தித்து மனு அளித்தேன். இதையேற்று, ஜன.1 முதல் சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயில் மொரப்பூர் ரயில் நிலை யத்தில் நின்றுசெல்லும் என ஒன்றிய அரசு  அறிவித்துள்ளது. இதுபோல, அடுத்தடுத்து ரயில்கள் நிற்பதற்கு ஏற்பாடு செய்யப்படும், என்றார்.

போட்டித்தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு

உடுமலை, டிச.28- என்எம்எம்எஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பில்,  15க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து  கொண்டனர். அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 8 ஆம்  வகுப்பு பயிலும் மாணவர்கள், தேசிய வருவாய் வழி திறனறித்  தேர்வுக்கு தயார் செய்யும் வகையில் இலவசப் பயிற்சி வகுப்பு  சனியன்று உடுமலை மீனாட்சி திருமண மண்டபத்தில் நடை பெற்றது. இப்பயிற்சி வகுப்பில் 15க்கும் மேற்பட்ட பள்ளி களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து  கொண்டு பயிற்சித் தேர்வு எழுதினர். இதுகுறித்து ஆசிரி யர்கள் கூறுகையில், 2025 – 26 ஆம் ஆண்டிற்கான வருவாய்  வழி மற்றும் தகுதிப்படிப்பு உதவித்தொகை திட்டத்தேர்வு  (NMMS) ஜன.10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு  மாணவர்களை தயார் செய்யும் வகையில், அரசுப்பள்ளி ஆசி ரியர்கள் சார்பில் இலவசமாக பயிற்சி வகுப்பு நடத்தப்படு கிறது. தேர்வு முன் வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை  10 மணி முதல் நண்பகல் 1.15 மணி வரை நடத்தப்படும், என்ற னர். முன்னதாக, பயிற்சி வகுப்புகளை ஆசிரியர்கள் செல்லத் துரை, ஈஸ்வரசாமி மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் ஒருங்கி ணைத்து நடத்தினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.