3.39 லட்சம் சிறுமியர்க்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி! மகளிர் உச்சி மாநாட்டில் முதல்வர் துவக்கி வைத்தார்
27 Jan 2026, 3:14 pm
<p><strong>3.39 லட்சம் சிறுமியர்க்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி! மகளிர் உச்சி மாநாட்டில் முதல்வர் துவக்கி வைத்தார்</strong></p>
<p>சென்னை, ஜன. 27 - சிறுமியர்க்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தமிழ்நாடு மகளிர் வேலை வாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் சார்பில் ஜனவரி 27, 28 ஆகிய தேதி களில் 2 நாட்களுக்கு உலக மகளிர் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டை, செவ்வாய்க்கிழமை யன்று துவக்கி வைத்த தமிழக முத லமைச்சர், கருப்பை வாய் புற்று நோயைத் தடுப்பதற்கான மாபெரும் தடுப்பூசித் திட்டத்தையும் இம்மாநா ட்டின் ஒருபகுதியாக துவக்கி வைத்துள் ளார். புற்றுநோய் பாதிப்புகளைத் தடுக்க, ஒரு வயது முதல் 14 வயது டைய சிறுமியர்க்கு எச்பிவி (The human papillomavirus - HPV) எனப் படும் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ரூ. 38 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. அதன்படியே தடுப்பூசித் திட்டத்தை முதலமைச்சர் தற்போது துவக்கி வைத்துள்ளார். இந்த புதிய திட்டத்தின் மூலம், ரூ. 14,000 மதிப்புள்ள கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி, தமிழ்நாட்டில் 14 வயதுக்கு உட்பட்ட சுமார் 3.39 லட்சம் சிறுமியர்க்கு இலவசமாக செலுத்தப்பட உள்ளது. ஈரோடு, திருப்பத்தூர், கன்னியா குமரி, ராணிப்பேட்டையில் புற்றுநோய் பாதிப்பு அதி கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், அங்கு சோதனை முயற்சியில் தடுப்பூசிகள் செலுத்தப்படும் நிலையில், விரை வில் மாநிலம் முழுவதும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. முன்னதாக, உலக மகளிர் உச்சி மாநாட்டில், உலக வங்கி யின் மண்டல இயக்குநர் செம் மெட்டே, ஐ.நா. பெண்கள் அமைப்பின் பிரதிநிதி காந்தா சிங், வளர்ச்சி இயக்க இந்திய பிரதிநிதி ஏஞ்சலா லுசிகி, மோரீஷஸ் தலைமை கொறடா நவீனா ரம்யாத் மற்றும் தொழில் துறை, கல்வித் துறை, பெருநிறுவன சமூகப் பொறுப்புத் திட்ட பங்காளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 70-க்கும் மேற்பட்ட ஆளுமைகள் கருத்துரை வழங்குகின்றனர்.</p>
