மறுசுழற்சி இயக்கம் மூலம் மக்களுக்கு இலவச புத்தகங்கள்
31 Mar 2026, 4:50 pm
<p><strong>மறுசுழற்சி இயக்கம் மூலம் மக்களுக்கு இலவச புத்தகங்கள்</strong></p>
<p>கோவை, மார்ச் 31- கோவை மாவட்ட தமிழ்நாடு அறிவி யல் இயக்கம் சார்பில் புத்தக மறுசுழற்சி இயக்கம் மூலம் திரட்டப்பட்ட ஆயி ரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. கோவை மாவட்ட தமிழ்நாடு அறிவி யல் இயக்கம் சார்பாக உலக மறுசுழற்சி தினத்தை முன்னிட்டு, படித்ததை பிற ருக்கு படிக்கக் கொடுப்போம் என்ற கருப்பொருளை மையப்படுத்தி புத்தக மறுசுழற்சி இயக்கம் தொடங்கப்பட் டது. இந்த இயக்கத்தில் போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள், சட்டத் துறை, மேலாண்மை மற்றும் அறிவி யல், இயற்பியல், உளத்தியல் குடிமைப் பொறியியல், தானி எந்திரப் பொறியி யல், கணிதவியல், ஆங்கிலம், தமிழ் என பல்வேறு தலைப்புகளின் கீழ் 1000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் 5க்கும் மேற்பட்ட மொழிகளில் பொதுமக்களிடமிருந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க உறுப்பி னர்களால் சேகரிக்கப்பட்ட புத்தகங் கள் கொங்குநாடு கலை அறிவியல் கல்லுரியில் காட்சிப்படுத்தப்பட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட் டது. இந்நிகழ்வில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஐஜி பாரி கலந்து கொண்டு அதிக புத்தகங்களை வழங்கியோ ருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தி பேசினார். இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கோவை மாவட்டத் தலைவர் பேராசிரி யர் இரா. பிரபாகரன், செயலர் மா.மணி மற்றும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் முனைவர்.சி.ஏ. வாசுகி, பேராசிரியர் சரவணக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
